தீபாவின் கணவர் தனிக்கட்சி தொடங்குகிறாரா?

-

Updated: Mar 18, 2017, 03:18 PM IST
தீபாவின் கணவர் தனிக்கட்சி தொடங்குகிறாரா?
Zee Media Bureau

தீபாவின் கணவர் மாதவன் புதியதாக கட்சி தொடங்க இருப்பதாக பேட்டி அளித்துள்ளார். மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தியதற்கு பின் செய்தியாளர்களிடம் அவர் பேசினார் அப்போது அவர்:-

புதிய கட்சி ஆரம்பிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இங்கு வந்துள்ளேன். தீபா பேரவை நடத்துகிறார். நான் கட்சி நடத்த இருக்கிறேன். அது பற்றி விரைவில் அறிவிப்பேன்.

நான் கட்சி தொடங்க இருப்பது பற்றி தீபா கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. தீபா பேரவையில் தீய சக்திகள் புகுந்துள்ளன. எம்ஜிஆர்-அம்மா-தீபா பேரவையில் உள்ள தீய சக்திகள் யார் என்பதை தகுந்த நேரம் வரும்போது மக்களிடம் அறிவிப்பேன். தீபா தன்னிச்சையாக செயல்படவில்லை. ஆர்கேநகரில் போட்டியிடுவது தொடர்பாக மக்களிடம் பேசி முடிவு செய்வேன்' என்றார்.