டிச.,31-ம் தேதிக்குள் ஆர்கேநகர் இடைத்தேர்தல் - தேர்தல் ஆணையம் அறிவிப்பு

Updated: Oct 12, 2017, 05:18 PM IST
டிச.,31-ம் தேதிக்குள் ஆர்கேநகர் இடைத்தேர்தல் - தேர்தல் ஆணையம் அறிவிப்பு
Zee Media

குஜராத் மற்றும் இமாச்சலப்பிரதேச சட்டசபைத் தேர்தல்களின் தேதி இன்று அறிவிக்கப்பட உள்ளதாக முன்னதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இமாச்சல் பிரதேச சட்டசபை தேர்தல் வரும் நவம்பர் 9-ஆம் தேதி நடைபெறும் என்றும், வாக்கு எண்ணிக்கை வரும் டிசம்பர் 18-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் குஜராத் சட்டபேரவை தேர்தல் டிசம்பர் 18-ஆம் தேதிக்குள் நடத்தப்படும் என்பது மட்டும் தெரிவிக்கப்பட்டது. அதேவேளையில் லஞ்சம் கொடுத்ததாக தள்ளிவைக்கப்பட்ட ஆர்கேநகர் தொகுதி இடைத்தேர்தல் வரும் டிசம்பர் 31-ம் தேதிக்குள் நடைபெறும் எனவும் தேர்தல்ஆணையம் அறிவித்துள்ளது.