இந்தியன் ரயில்வே துறையில் 62,907 பேருக்கு வேலை வாய்ப்பு!!

இந்திய ரயில்வே துறையில் 62,907 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு செய்தி வெளியாகியுள்ளது.

Updated: Feb 9, 2018, 07:30 AM IST
இந்தியன் ரயில்வே துறையில் 62,907 பேருக்கு வேலை வாய்ப்பு!!
ZeeNewsTamil

இந்திய ரயில்வே துறையில் 62,907 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. டிராக்மேன், கேட்மேன், பாயிண்ட்ஸ்மேன், எலெக்ட்ரிக்கல் ஹெல்பர், மெக்கானிக்கல், சிக்னல் டெலிகம்யூனிகேஷன் போன்ற பிரிவுகளில் பணிகள் இருக்கிறது. 

இதற்கு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் பத்தாம் வகுப்பு அல்லது ஐ.டி.ஐ படித்தவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். 31 வயதிற்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி, தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வயது வரம்பில் விலக்கு அளிக்கப்படும். சம்பளம்: ரூ.18000/- (LEVEL 1 OF 7TH CPC PAY MATRIX). 

எப்படி விண்ணப்பிப்பது: 

1. பொது மற்றும் ஓ.பி.சி பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.500/- (ஆண்களுக்கு மட்டும்). தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், பெண் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.250 (Refundable). விண்ணப்பதாரர்கள் ஏதேனும் ஒரு பதவிக்கு மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

2. விண்ணப்பங்களை இணையதளம் வழியாக மட்டுமே சமர்பிக்க முடியும். புதியதாக விண்ணப்பிப்பவர்கள் இணையதளத்திற்குச் சென்று தங்களின் விவரங்களை பூர்த்தி செய்யவும். 

3. பின்னர், Login id மற்றும் பிறந்த நாள் மற்றும் வருடத்தைப் பயன்படுத்தி ஆன்லைன் விண்ணப்ப படிவத்தின் பகுதிக்குச் செல்லவும். அதில் சரியான மொபைல் நம்பர் மற்றும் இ-மெயில் முகவரியை கொடுக்கவும்.

4. செலானை பிரிண்ட் அவுட் எடுத்து பாரத ஸ்டேட் வங்கிக் கிளைகளில் அல்லது போஸ்ட் ஆஃபீஸில் கட்டணத்தைச் செலுத்தலாம். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, இன்டர்நெட் பேங்கிங் ஆகியவற்றின் மூலமாகவும் கட்டணத்தைச் செலுத்தலாம். ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களுக்கு இ-மெயில் கணக்கு இருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் முறை குறித்து இணையதளத்தில் விரிவான தகவல்கள் உள்ளன.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: நாளை துவங்கி 12.03.2018 வரை.

மேலும் விவரங்களை:- www.rrbchennai.gov.in -என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by clicking this link

Close