அடுத்தாண்டு ஜனவரியில் வெளியாகிறது இறுதி வாக்காளர் பட்டியல்!

அடுத்தாண்டு ஜனவரி 4-ஆம் நாள் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது!

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 15, 2018, 07:01 PM IST
அடுத்தாண்டு ஜனவரியில் வெளியாகிறது இறுதி வாக்காளர் பட்டியல்! title=

அடுத்தாண்டு ஜனவரி 4-ஆம் நாள் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது!

தமிழகம் முழுவதும் கடந்த செப்டம்பர் 1-ஆம் நாள் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்த வாக்காளர் பெயர் பட்டியலின் படி தமிழகத்தில் 5 கோடியே 82 லட்சத்து 89 ஆயிரத்து 379 வாக்காளர்கள் உள்ளனர். 

வாக்காளர் பட்டியலில் வாங்களார் தங்களது பெயர் விவரங்கள் சரியாக உள்ளது என திருத்திக்கொள்ள சிறப்பு முகாம்கள் தேர்தல் ஆணையத்தால் ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த வகையில் கடந்த செப்டம்பர் 9-ஆம் நாள் முதற்கட்ட வாக்காளர் சரிபார்ப்பு பணி 67,644 ஓட்டுச்சாவடிகளில் நடத்தப்பட்டது.

இதனைத்தொடர்ந்து இரண்டாம் கட்ட சிறப்பு முகாம் செப்டம்பர் 23-ஆம் நாள் தமிழகம் முழுவதும் 67,674 வாக்குச் சாவடிகளிலும் நடைப்பெற்றது. பின்னர் அக்டோபர் மாதம் இரண்டு நாட்கள் என 4 நாட்கள் இந்த சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டது. இந்த சிறப்பு முகாம்களில் வாக்காளர்கள் தங்களது பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது.

அதன்படி இந்த சிறப்பு முகாம்களில் 16,21000 விண்ணப்பங்கள் பெறப்பட்டதாகவும், இதில் புதிதாக பெயர் சேர்க்க 11,91,000 விண்ணப்பங்கள், பெயரை நீக்க 1,36,000 விண்ணப்பங்கள், திருத்தம் மேற்கொள்ள 81000 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இனி பெயர் சேர்க்க மற்றும் திருத்தம் செய்ய விரும்புவோர் இம்மாத இறுதிக்குள் செய்துக்கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பிடப்பட்டுள்ள இந்த நாட்களில் பெறப்படும் விண்ணப்பங்களை பரிசிலினை செய்து இறுதி வாக்காளர் பட்டியல் அடுத்தாண்டு ஜனவரி 4-ஆம் நாளுக்குள் வெளியிடப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Trending News