குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கு; பொதுமக்கள் குளிக்க தடை!

தென்மாவட்டங்களில் பொழிந்து வரும் தொடர் மழை காரணமாக குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது!

Updated: Jun 13, 2018, 04:38 PM IST
குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கு; பொதுமக்கள் குளிக்க தடை!

தென்மாவட்டங்களில் பொழிந்து வரும் தொடர் மழை காரணமாக குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது!

தொடர் மழை காரணமாக குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருப்பதால், சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. 
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் தமிழகத்தில் பல மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்குகிறது. கன மலையின் காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் பொழிந்து வரும் தென்மேற்கு பருவமழை காரணமாக மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர் பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது.

இதன் காரணமாக குற்றால அருவியிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் குற்றால அருவியில் பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக இன்று காலை தென்மேற்கு பருவமழை காரணமாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவிக்கையில்... "தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இதனால் கோவை, நீலகிரி, தேனி, திருநெல்வேலி மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் கனமழை பெய்யும். இப்பகுதிகளில் மீனவர்கள் கடலுக்கு செல்லும்போது எச்சரிக்கை தேவை. இந்த மாவட்டங்களைத் தவிர வெப்பசலனத்தால் தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான அளவு மழை பெய்யும். 

சென்னையில் தரைக்காற்று பலமாக வீசும் மற்றும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்சமாக 37 டிகிரியும், குறைந்தபட்சம் 29 டிகிரியும் வெப்பநிலை பதிவாகும். கடந்த 24 மணி நேரத்தில் சின்னக்கல்லார் மற்றும் வால்பாறையில் தலா 13 செ.மீ மழை பதிவாகியுள்ளது. தேனி மாவட்டம் பெரியார், நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் தேவாலாவில் தலா 9 செ.மீ மழையும் , செங்கோட்டையில் 7 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது" என தெரிவித்துள்ளார். 

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by clicking this link

Close