ADMK-வில் புதிய நிவாகிகள்; களத்தில் முன்னாள் MLA-க்கள்...!

அ.தி.மு.க-வில் புதிதாக அமைப்புச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளை அறிவித்துள்ளனர்..!  

Zee News Tamil (Web Team) Zee செய்திகள்(இணைய பிரிவு) | Updated: Sep 14, 2018, 09:31 AM IST
ADMK-வில் புதிய நிவாகிகள்; களத்தில் முன்னாள் MLA-க்கள்...!
File Pic

அ.தி.மு.க-வில் புதிதாக அமைப்புச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளை அறிவித்துள்ளனர்..!  

அ.தி.மு.க-வின் கட்சியின் புதிதாக அமைப்புச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளை கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் வெளியிட்டுள்ளனர். இதுகுறித்து, அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர்களான ஓ. பன்னீர் செல்வம் மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது... அமைப்புச் செயலாளர்களாக, முன்னாள் அமைச்சர் ப.மோகன், எம்.எல்.ஏ முருகையா பாண்டியன், என்.சின்னத்துரை, செஞ்சி ந.ராமச்சந்திரன், எம்.பரஞ்சோதி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கொள்கைப் பரப்பு துணைச் செயலாளர்களாக முன்னாள் அமைச்சர் செ.ம.வேலுசாமி, பு.தா.இளங்கோவன் நியமிக்கப்பட்டுள்ளனர். விவசாயப் பிரிவுத் தலைவராக டி.ஆர்.அன்பழகன், விவசாயப் பிரிவு செயலாளராக அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ண மூர்த்தி, விவசாய பிரிவு இணைச் செயலாளராக செ.தாமோதரன் நியமிக்கப்பட்டுள்ளனர். வர்த்தக அணித் தலைவராக எம்.எல்.ஏ கே.அர்ச்சுனன், வர்த்தக அணிச் செயலாளராக கே.ரவிச்சந்திரன், கலைப் பிரிவுத் தலைவராக லியாகத் அலிகான், கலைப் பிரவு செயலாளராக ஆர்.வி.உதயகுமார், கலைப் பிரிவு இணைச் செயலாளராக பி.சி.அன்பழகன் நியமிக்கப்பட்டுள்ளனர். 

செய்தித் தொடர்பாளர்களாக, நிர்மலா பெரியசாமியும், லியாகத் அலிகானும் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், கட்சியின் சார்பு அமைப்புகளுக்கும் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.