தமிழக சட்டப்பேரவையில் ஜிஎஸ்டி மசோதா நிறைவேற்றம்!!

Updated: Jun 19, 2017, 06:49 PM IST
தமிழக சட்டப்பேரவையில் ஜிஎஸ்டி மசோதா நிறைவேற்றம்!!
Zee Media

தமிழக சட்டப்பேரவையில் ஜி.எஸ்.டி மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.

திமுகவின் எதிர்ப்பை மீறி ஜிஎஸ்டி மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

கடந்த ஜூன் 13-ம் தேதி தாக்கல் ஜி.எஸ்.டி மசோதா செய்யப்பட்டது. தமிழக சட்டப்பேரவையில் ஜி.எஸ்.டி மசோதா குறித்த விவாதம் நடந்தது.

கடும் அமளிக்கிடையே ஜிஎஸ்டி சட்ட மசோதாவை குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. இதனால் ஜிஎஸ்டி மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

ஜூலை 1-ம் தேதி முதல் நாடு முழுவதும் ஜி.எஸ்.டி மசோதா அமல்படுத்தப்பட உள்ளது.