6வது நாளாக கோடநாடு எஸ்டேட்டில் ஐடி ரெய்டு

கோடநாட்டில் உள்ள கர்சன் எஸ்டேட்டில் இன்றும் சோதனை தொடர்ந்து வருகிறது. 

Updated: Nov 14, 2017, 08:56 AM IST
6வது நாளாக கோடநாடு எஸ்டேட்டில் ஐடி ரெய்டு

கோடநாடு கர்சன் எஸ்டேட்டில் இன்று 6-வது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை தொடர்ந்து நடந்து வருகிறது. 

தமிழகம் முழுவதும் சசிகலா உறவினர்களின் வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தற்போது வரை வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். 

நேற்று பல்வேறு இடங்களில் சோதனைகள் நிறைவடைந்த நிலையில் கோடநாட்டில் உள்ள கர்சன் எஸ்டேட்டில் இன்றும் சோதனை தொடர்ந்து வருகிறது.