ஜல்லிக்கட்டு புதிய சட்ட மசோதா நிறைவேறியது

Last Updated : Jan 23, 2017, 06:24 PM IST
ஜல்லிக்கட்டு புதிய சட்ட மசோதா நிறைவேறியது title=

இன்று தமிழக சட்டசபையின் சிறப்பு கூட்டம் மாலை கூடியது.

சட்டசபை சிறப்பு கூட்டத்தில் அவசர சட்டத்தின் சட்ட முன் வடிவு அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக, ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் கார்த்திகேய சிவசேனாதிபதி, ராஜேஷ், ராஜசேகரன், ஆதி, அம்பலத்தரசு, மாணவ பிரதிநிதிகள் ஐந்து பேர், நீதிபதி அரிபரந்தாமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.  சட்ட முன்வடிவை முதல்- அமைச்சர்  ஓ. பன்னீர்செல்வம் முன்மொழிய, சபாநாயகர் தனபால், ஆய்வுக்கு எடுத்துக் கொண்டார். இதையடுத்து, சட்டப்பேரவையில் இந்த மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம், ஜல்லிக்கட்டுக்கு நிரந்த சட்டம் உருவாகியுள்ளது.

இந்த சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டதை அடுத்து, ஜல்லிக்கட்டு நடத்த இருந்த தடை முற்றிலும் நீக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

 

 

Trending News