சேலத்தில் காஜல் அகர்வால் குடும்ப அட்டை கன்டெடுப்பு!

Updated: Sep 13, 2017, 10:06 AM IST
சேலத்தில் காஜல் அகர்வால் குடும்ப அட்டை கன்டெடுப்பு!
Pic Courtesy: Twitter

தமிழக அரசு பொதுமக்களுக்கு வினியோகம் செய்து வரும் ஸ்மார்ட் கார்ட்-னில் குடும்பத்தலைவி ஒருவரின் புகைப்படத்திற்கு பதிலாக நடிகையின் புகைப்படம் மாறி இடம்பெற்றுள்ள நிகழ்வு நெட்டிசன்களுக்கு பெரும் தீனியாய் அமைந்துள்ளது.

சேலம், ஓமலூர் தாலுகாவின் ஆர்.சி.செட்டிபட்டி காமலாபுரம் பகுதியை சேர்ந்தவர் சரோஜா. இவருக்கு வழங்கப்பட்டுள்ள ஸ்மார்ட் கார்டில் சரோஜா படத்திற்கு பதிலாக நடிகை காஜல் அகர்வால் படம் மாறி இடம்பெற்றுள்ளது.

இந்த விவகாரம் தற்போது நெட்டிசன்களால் பரவலாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. அரசாங்க அட்டைகளான ஆதார், வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுனர் உரிமம் என அனைத்திலும் இடம்பெரும் புகைப்படங்கள் யாவும் தாங்கள் தானா என சந்தேகிக்கும் அளவிளே இருக்கும் நிலையினில் தற்போது இந்த நிகழ்வு இதற்கெல்லாம் உச்சமாக அமைந்துள்ளது.

சும்மா விடுவார்களா நம் நெட்டிசன்கள்!!