மதுரையில் தனது முதல் அரசியல் மாநாட்டை துவங்குகிறார் கமல்!

நடிகர் கமல்ஹாசன் தனது முதல் அரசியல் மாநாட்டை மதுரையில் துவங்குகிறார். 

Last Updated : Feb 15, 2018, 03:24 PM IST
மதுரையில் தனது முதல் அரசியல் மாநாட்டை துவங்குகிறார் கமல்! title=

அரசியல் களத்தில் இறங்கும் நடிகர் கமல்ஹாசன், அதற்கான தீவிர பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இதையடுத்து, வருகின்ற 21-ம் தேதி ராமேஸ்வரத்தில் உள்ள அப்துல்கலாம் இல்லத்தில் தனது அரசியல் பயணத்தை தொடங்கும் அவர், அன்றைய தினமே மதுரையிலும் தனது முதல் அரசியல் மாநாட்டை நடத்துகிறார். 

இதை தொடர்ந்து கமலின் அரசியல் பயணத்திற்கு நாளை நமதே என பெயர் சூட்டப்பட்டது. நடிகர் கமல் தனது முதல் மாநாடு மதுரையில் நடைபெறும் என அறிவித்திருந்தார். ஆனால், மதுரையில் எங்கு என்பது பற்றி அவர் குறிப்பிட வில்லை.

இதையடுத்து தற்போது மதுரையில் அரசரடி பகுதியில் உள்ள யூசி மைதானத்தில் கமலின் முதல் அரசியல் மாநாட்டிடு நடக்க இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

 இம்மைதானத்தில் மாநாடு அன்று சுமார் 1 லட்சம் பேர் கூடுவார்கள் என கமல் ரசிகர் மன்றத்தினர் எதிர்ப்பார்க்கின்றனர்.

Trending News