Tamil Nadu Budget Live: தாக்கல் செய்யப்பட்டது தமிழக பட்ஜெட் 2023! இத்தனை அறிவிப்புகளா?

தமிழக நிதிநிலை அறிக்கை 2023 கூட்டத் தொடர் இன்று நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தொடரில் முக்கியமான பல அறிவிப்புகளை முதலமைச்சர் முக ஸ்டாலின் வெளியிட உள்ளார். 

Last Updated : Mar 20, 2023, 10:30 AM IST
Live Blog

 Tamil Nadu Budget 2023 Live Updates: தமிழக நிதிநிலை அறிக்கை 2023 கூட்டத் தொடர் இன்று நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில் முக்கியமான பல அறிவிப்புகளை தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார்.

20 March, 2023

  • 11:56 AM

    TN budget 2023: பட்ஜெட் உரையை 2 மணி நேரத்தில் வாசி முடித்தார் நிதி அமைச்சர்; வாழ்க தமிழ், வெல்க தமிழ்நாடு என பேசி முடித்தார்

  • 11:51 AM

    Tamil Nadu State Budget 2023: நிலம் வாங்குவோரின் சுமையை குறைக்க பதிவுக் கட்டணத்தை 4 சதவிகிதத்திலிருந்து 2 சதவிகிதமாக குறைப்பு

  • 11:50 AM

    Tamil Nadu Budget 2023-24: மகளிர் உருமைத் திட்டத்தின் கீழ் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என தேர்தல் வாக்குறுதி அளித்தது போல தகுதி வாய்ந்த குடும்ப தலைவிகளுக்கு 1000 ரூபாய் வழங்கப்படும்.

  • 11:49 AM

    Tamil Nadu Budget: சென்னை ,மதுரை ,கோவை ,ஆவடி உள்ளிட்ட 7 மாநகராட்சியில் இலவச வைபை வசதி
    - கோவில் நில ஆக்கிரமிப்பு மீட்டு எடுக்கப்பட்டு உள்ளது, 574 கோயில்களில் திருப்பணி நடக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது
    - பழனி, சமயபுரம், திருத்தணி கோயில்கள் பெருத்திட்ட பணிகள் அமல்படுத்தப்படும்
    - வரும் ஆண்டு 420 கோயில்களில் கும்பாபிஷேகம் நடத்தப்படும்

  • 11:48 AM

    Tamil Nadu State Budget 2023: விருதுநகர் ,வேலூரில் ₹420 கோடி மதிப்பில் சிப்காட் தொழிற்சாலை அமைக்கப்படும்

    22,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்

  • 11:30 AM

    Tamil Nadu State Budget Live

     

     சேலத்தில் ஜவுளி பூங்கா அமைக்கப்படும்
    - 77,000 கோடி மதிப்பில் புதிய மின்திட்டம் உருவாக்கப்படும்
    - ஐனவரியில் உலக முதலீட்டாளர் மாநாடு நடத்த 100 கோடி ஒதுக்கீடு
    - 221 புரிந்துணர்வு ஒப்பந்தம் இதுவரை போடப்பட்டு தொழில் துவங்கப்பட்டு உள்ளது

  • 11:25 AM

    பசுமை மின் வாகன உற்பத்தியில் தமிழ்நாடு முதலிடம். இருசக்கர  மின்வாகன உற்பத்தியில் இந்தியாவில் 46 சதவீத வாகனங்கள் தமிழகத்தில் தயாரிக்கப்பட்டுள்ளதாக பெருமிதம்.

  • 11:18 AM

    - அவிநாசி, சத்தியமங்கலம் சாலை உள்ளடக்கிய மெட்ரோ கோவையில்
    - மதுரையில் 8500 கோடி மதிப்பில் மெட்ரோ ரயில் திட்டம்
    - மதுரை திருமங்கலம்- ஒத்தகடை இணைக்கும் வகையில் மெட்ரோ ரயில் திட்டம்
    - பசுமை மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்க சிறப்பு நிறுவனம் ஒன்று அமைக்கப்படும்

  • 11:17 AM

    - தேனாம்பேட்டை, சைதாப்பேட்டை வரை 4 வழி மேம்பாலம்
    - வடசென்னையில் உட்கட்டமைப்பு மேம்படுத்த 1000்கோடி ஒதுக்கீடு
    - சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு 10,000 கோடி ஒதுக்கீடு

  • 11:06 AM

    - சென்னை தீவுத்திடலை மேம்படுத்த 50 கோடி நிதி ஒதுக்கீடு
    - சென்னை புறநகர் பகுதியில்  1424 கிலோ மீட்டர் மண் சாலைகள் 1211 கோடியில் மேம்படுத்தப்படும்
    - வடபழனி, வியசார்பாடி, திருவான்மியூர் பணிமனைகள் முதல்கட்டமாக மேம்படுத்தப்படும்
    - சைதாப்பேட்டை, தாம்பரம் இரண்டாம் கட்டமாக பணிமனைகள் மேம்படுத்தப்படும்

  • 11:05 AM

    கோவையில் உலகத்தரம் வாய்ந்த செம்மொழி பூங்கா

    முதற்கட்டமாக 45 ஏக்கர் பரப்பளவில் தாவரவியல் பூங்கா இதர வசதிகள் மேம்படுத்த 172 கோடியில் கட்டப்படும்

  • 11:02 AM

    - பறவை பாதுகாப்பு ஆய்விற்காக மரக்காணத்தில் 25 கோடி மதிப்பில் பன்னாட்டு பறவைகள் மையம் அமைக்கப்படும்
    - முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தில் 2000 கோடி ஒதுக்கீட்டில் 5145 கிலோ மீட்டர் சாலைகளை மேம்படுத்த திட்டம்
    - தமிழ்நாட்டின் கிராம பகுதிகளில் உள்ள 10000 குளங்கள், ஊரணிகள் என்று 800 கோடி ரூபாய் புதுப்பிக்கப்படும்

  • 10:57 AM

    மீன்வளத் துறையில் மீன்பிடி தடைக்காலத்தில் மீனவர்களுக்கு வழங்க  389 கோடி நிதி ஒதுக்கீடு

    தமிழ்நாடு நெய்தல் திட்டம் என்று 2000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும் - அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

  • 10:56 AM

    - விவசாய கடன்களுக்கு 2390 கோடி ஒதுக்கீடு
    - நகை கடன் வழங்க 1000 கோடி ஒதுக்கீடு
    - மகளிர் சுய உதவிக்குழு கடன் தள்ளுபடிக்கு ₹600 கோடி ஒதுக்கீடு
    - 341 ஏரி , 67 அணைக்கட்டு, 17 கால்வாய் புனரமைக்க ஒப்புதல்

  • 10:55 AM

    உயர்கல்வி படிக்கும் மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டம் மூலம் மாதம்  1000 ரூபாய் வழங்கும் திட்டத்தின் மூலம் 29 சதவீதம் வருகை அதிகரித்துள்ளது. 20 ஆயிரத்து 477  மாணவிகள் புதிதாக  சேர்ந்துள்ளனர்.

  • 10:55 AM

    மகளிர் சுய உதவி குழுவிற்கு- 30000 கோடி ரூபாய் வரும் நிதி ஆண்டில் வழங்கப்பட நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது- அமைச்சர் பழனிவேல் ராஜன்

  • 10:50 AM

    காலை உணவு திட்டத்தால் 1319 பள்ளிகளில் மாணவர்களின் வருகை அதிகரிப்பு

    திருப்பத்தூர் பெரம்பலூர் அரியலூர் திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் காலை உணவு திட்டத்தால் தொடக்கப்பள்ளி மாணவர்களின் வருகை அதிகரிப்பு

  • 10:48 AM

    - மாற்றுத்திறனுக்கான தனியான டேட்டா பேஸ் அமைப்பு உருவாக்கப்படும்- அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
    - ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை 18 லட்சம் மாணவர்கள் பயனடையும் வகையில் 500கோடி  ஒதுக்கீடு
    - திருப்பத்தூர் பெரம்பலூர் அரியலூர் திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மாணவர்கள் வருகை அதிகரிப்பு

  • 10:48 AM

    - உயர்கல்வி துறைக்கு 6967 கோடி நிதி ஒதுக்கீடு
    - காலை உணவு திட்டம் அனைத்து அரசு பள்ளிகளிலும் விரிவுப்படுத்தப்படும்
    - மாற்று திறனாளி உரிமை திட்டத்திற்கு 39 சேவை மையம் துவங்கப்படும்
    - கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்று திறனாளிகளுக்கு உதவி தொகை 1500 இருந்த 2000 ஆக உயர்த்தி அறிவிப்பு
    - மாற்று திறனாளி தொழில் முன்னேற றத்திற்கு கடன் உதவி

  • 10:36 AM

    - அம்பத்தூரில் 150 கோடி மதிப்பில் திறன் மேம்பாட்டு மையம்
    - நான் முதல்வன் திட்டத்திற்கு ₹50 கோடி ஒதுக்கீடு
    - சென்னையில் அதி நவீன விளையாட்டு நகரம் அமைக்கப்படும்
    - 25 கோடி மதிப்பில் நேரு விளையாட்டு அரங்கம் மேம்படுத்தப்படும்

  • 10:32 AM

    - எண்ணும் எழுத்தும் திட்டம் 110்கோடி மதிப்பில் 4ம் வகுப்பு 5ம் வகுப்பு விரிவுப்படுத்தப்படும்
    - ஆதி திராவிட பழங்குடியின பள்ளிகளில் பள்ளிகல்வி துறை கட்டுப்பாட்டில் கொண்டு வரப்படும்
    - பாளையங்கோட்டை சித்த மருத்துவ கல்லூரி 40 கோடி மதிப்பில் உயர்த்தப்படும்
    - சர்வதேச உலகள அலவிளான விளையாட்டு மையம் சென்னையில் அமைக்கப்படும்
    - ஒருங்கிணைந்த கல்வி உதவித்தொகை இணைய தளம் உருவாக்கப்படும்

     

  • 10:26 AM

    - திருச்சி அதை சுற்றி உள்ள மாவட்டங்களில் மகாத்மா காந்தி மருத்துவமனையில் 110 கோடி மதிப்பில் சிறப்பு கட்டிடங்கள் கட்டப்படும்
    - பள்ளிக்கல்வித்துறையில்,  1500 கோடி செலவில் வரும் நிதியாண்டில் வகுப்பறைகள்,  கட்டடங்கள் கட்டப்படும்- அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
    - சர்வதேச புத்தக கண்காட்சி வரும் ஆண்டும் நடத்தப்படும்
    - மருத்துவம் மற்றும் குடும்ப நலத்துறைக்கு 18,661 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு
    - தஞ்சாவூரில் ராஜராஜ சோழனுக்கு  அருங்காட்சியம் கட்டப்படும் - அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

  • 10:20 AM

    - தமிழகத்தில் முக்கிய நகரங்களில் மெட்ரோ அமைக்கப்படும் -நிதி அமைச்சர்
    - கிண்டி கலைஞர் நினைவு பன்னோக்கு மருத்துமனை இந்த ஆண்டு துவங்கப்படும்
    - இலங்கை தமிழர் மறுவாழ்வு 3510 குடியுருப்பு வீடுகள் 176 கோடி மதிப்பீட்டில் கடடப்ட்டும்

  • 10:19 AM

    - சங்கம் பண்பாட்டு பெருவிழா முக்கிய நகர்புறங்களில் விரிவுப்படுத்தப்படும்
    - தமிழ் கணிணி பண்பாட்டு மாநாடு தமிழில் நடத்தப்படும்
    - தஞ்சையில் சோழர் அருங்காட்சியகம் அமைக்கப்படும்
    - மக்களை தேடி மருத்துவம் திட்டம் விரிவுப்படுத்தப்படும்

  • 10:18 AM

    தமிழக பட்ஜெட் 2023: நிதியமைச்சர் உரையாற்றி வருகிறார்

    - கொரானா பெருந்தொற்று காலத்தில் இருந்த நிதி நெருக்கடி குறைந்து உள்ளது
    - தமிழ் மூதறிஞர்களுக்கு கட்டணமில்லா பேருந்து அட்டை வழங்கப்பட்டு வருகிறது
    - அம்பேத்கார் படைப்புகள் தமிழில் மொழி பெயர்க்கப்படும்

  • 10:08 AM

    அதிமுக வெளிநடப்பு

    ஈரோடு இடைத்தேர்தலில் முறைகேடாக திமுக கூட்டணி வெற்றி பெற்றதாக கூறி அதிமுக வெளிநடப்பு

  • 10:07 AM

    3-வது ஆண்டாக காகிதமில்லாத பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

  • 09:28 AM

    ஈரோடு கிழக்கு எம்எல்ஏ ஈ வி கே எஸ் இளங்கோவனுக்கு 177 வது இருக்கை வழங்கப்பட்டுள்ளது.  எதிர்க்கட்சிகளின் வரிசையில் இரண்டாவது ரோவில் சிந்தனை செல்வனுக்கு பின்புறம் இருக்கை வழங்கப்பட்டுள்ளது

  • 08:57 AM

    தேர்தல் அறிக்கையில் உறுதியளித்திருந்தபடி, குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கும் திட்டம் பற்றிய அறிவிப்பு வெளியாகவிருக்கிறது. 

  • 08:26 AM

    மருத்துவமனைகளில் அடிப்படை உள்கட்டமைப்புகளை மேம்படுத்துதல், காலிப் பணியிடங்களை நிரப்புதல் போன்றவற்றுக்குத்தான் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் எனும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

     

  • 08:19 AM

    தமிழக பட்ஜெட் 2023ல் வேளாண்மை, சுகாதாரத் துறைகளை டிஜிட்டல்மயப்படுத்துவது தொடர்பான முக்கிய அறிவிப்புகள் இடம்பெறலாம்.

     

  • 07:47 AM

    நாட்டிலேயே அதிகத் தொழிற்சாலைகள் கொண்ட மாநிலம் தமிழ்நாடு.  தமிழக பட்ஜெட் 2023ல் தொழில் துறை மேம்பாட்டுக்கான முக்கிய அறிவிப்புகள் எதிர்பார்க்கப்படுகின்றன.

  • 07:29 AM

    கடந்த நிதிநிலை அறிக்கையில், தமிழ்நாடு அரசின் வருவாய்ப் பற்றாக்குறை 4.69%இலிருந்து 3.80% ஆகக் குறையும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த அம்சங்களை அலசி ஆராய்ந்து, வரி வருவாயைப் பெருக்கும் வகையிலான திட்டங்கள் இந்த நிதிநிலை அறிக்கையில் முன்வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

     

  • 07:07 AM

    2023-24ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் இன்று காலை 10 மணிக்கு சட்டப்பேரவையில் தாக்கல் செய்ய உள்ளார்.

Trending News