ஒரே வாரத்தில் 2-வது முறையாக LPG எரிவாயு விலை உயர்வு!

வீட்டு உபயோகத்திற்காக இல்லம் தோறும் விநியோகிக்கப்படும் மானியத்துடன் கூடிய சமையல்எரிவாயு சிலிண்டரின் விலை மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது! 

Updated: Nov 9, 2018, 06:37 PM IST
ஒரே வாரத்தில் 2-வது முறையாக LPG எரிவாயு விலை உயர்வு!

வீட்டு உபயோகத்திற்காக இல்லம் தோறும் விநியோகிக்கப்படும் மானியத்துடன் கூடிய சமையல்எரிவாயு சிலிண்டரின் விலை மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது! 

நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாள் தோறும் உயர்த்தப்படுகிறது. அதேப்போல் சமையல் எரிவாயுவின் விலையை மாதம்தோறும் எண்ணெய் நிறுவனகள் மாற்றியமைத்து வருகின்றனர். அந்த வகையில் இம்மாதத்தின் முதல் நாள் எரிவாயு சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டது.

இந்நிலையில் இன்று மீண்டும் எரிவாயு சிலிண்டர் விலை மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இது குறித்து இந்தியன் எண்ணெய் நிறுவனம் சமையல் எரிவாயுவின் விலையை நினயித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், மானியத்துடன் வழங்கப்படும் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை சென்னையில் ₹ 495.39-வும், மானியம் இல்லா சிலிண்டர் ₹ 960.00-வும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

முன்னதாக இம்மாத்ததின் முதல் நாள் அறிவிக்கப்பட்ட விலையின்படி... மானியத்துடன் வழங்கப்படும் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை சென்னையில் ₹ 493.87-வும், மானியம் இல்லா சிலிண்டர் ₹ 958.00-வும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று உயர்வு கண்டுள்ள சிலிண்டர் விலை சுமார் ₹2 உயர்வு கண்டுள்ளது!

சிலிண்டர் வினியோகஸ்தர்களின் வேண்டுகோள் பேரில் இந்த விலை உயர்வு நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.