புதிய கட்சியை துவங்கும் தீபாவின் கணவர் மாதவன்

Updated: Apr 21, 2017, 11:08 AM IST
புதிய கட்சியை துவங்கும் தீபாவின் கணவர் மாதவன்
Pic courtsey: PTI

எம்.ஜி.ஆர்., அம்மா தீபா பேரவையின் பொதுச் செயலாளர் தீபாவின் கணவர் மாதவன் இன்று புதிய கட்சி துவங்கப் போவதாக அறிவித்துள்ளார்.

ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை என்ற அமைப்பை தொடங்கினார். ஆனால், அந்த அமைப்பின் நிர்வாகிகள் நியமனத்தில் அவருக்கும், அவரது கணவர் மாதவனுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதன் காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். 

இந்நிலையில் ஏப்ரல் 21-ம் தேதி புதிய கட்சி துவங்கப் போவதாக, கடந்த சில நாட்களுக்கு முன் ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த வந்த மாதவன் அறிவித்தார். 

இதனையடுத்து, இன்று காலை 11.00 மணியளவில் மாதவன், ஜெயலலிதா நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்த உள்ளார். பின்னர் தனது புதிய கட்சியை மாதவன் துவக்க உள்ளார். இது குறித்து அறிவிப்பை மாதவன் வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.