ராம்நாத் கோவிந்த்க்கு வாழ்த்து தெரிவித்த மு.க.ஸ்டாலின்

Last Updated : Jul 21, 2017, 10:43 AM IST
ராம்நாத் கோவிந்த்க்கு வாழ்த்து தெரிவித்த மு.க.ஸ்டாலின் title=

குடியரசுத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ராம்நாத் கோவிந்த் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளர்.

அதைக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:-

இந்திய குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள மேதகு ராம்நாத் கோவிந்த் அவர்களுக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலும், தலைவர் கலைஞர் அவர்கள் சார்பிலும் இதயம் கனிந்த நல் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

அரசியல் அமைப்புச் சட்டத்தின் மாண்புகளை நிலைநாட்டி, மதச்சார்பற்ற தன்மை உள்ளிட்ட இத்திருநாட்டின் பன்முகத் தன்மையைப் போற்றிப் பாதுகாப்பதில் அவர் உறுதியாக இருப்பார் என்று மனதார நம்புகிறேன்.

Trending News