Honor Killing: கண்ணகி ஆணவக் கொலை வழக்கு; அண்ணனுக்கு தூக்கு, 12 பேருக்கு ஆயுள்

2003ம் ஆண்டு நடந்தேறிய கொடூர ஆணவக் கொலை வழக்கில் நீதிமன்றம் இன்று அதிரடி தீர்ப்பு வழங்கியது

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Sep 24, 2021, 03:28 PM IST
  • கண்ணகி ஆணவ கொலை வழக்கு 13 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு
  • ஒருவருக்கு தூக்கு, 12 பேருக்கு ஆயுள் தண்டனை
  • 2003ம் ஆண்டு நடந்தேறிய கொடூர ஆணவக் கொலை வழக்கில் இன்று தீர்ப்பு
Honor Killing: கண்ணகி ஆணவக் கொலை வழக்கு; அண்ணனுக்கு தூக்கு, 12 பேருக்கு ஆயுள் title=

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் புதுப்பேட்டையில் சாதி மாறி திருமணம் செய்ததால் கணவன் - மனைவி இருவரும் எரித்துக் கொலை செய்யப்பட்டனர். 

2003ஆம் ஆண்டு ஜூலை எட்டாம் தேதியன்று முருகேசன்- கண்ணகி தம்பதிகள் படுகொலை செய்யப்பட்டனர்.  இந்த வழக்கில் 15 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.  

2004ஆம் ஆண்டு முதல் சிபிஐ இந்த வழக்கை விசாரித்து வந்தது. இந்த ஆணவக் கொலை காட்டுமிராண்டித்தனமாக நடைபெற்றது, சாதாரண மக்களை எச்சரிக்கும் விதமாக இந்த கொலை நடந்துள்ளது என்று தனது அதிர்ச்சியை நீதிபதி உத்தம ராஜா தனது தீர்ப்பில் பதிவு செய்துள்ளார்.  இந்த வழக்கில் இறுதியாக கண்ணகி எரித்ததாகவே இருக்கட்டும் நீதிபதி தெரிவித்தார். 

kannagi

கொலை செய்யப்பட்ட கண்ணகியின் அண்ணன் மருதுபாண்டிக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. கண்ணகியின் தந்தை துரைசாமி உள்ளிட்ட 5 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. உறவினர்களுக்கு தூக்கு மற்றும் ஆயுள் தண்டனையை வழங்கிய நீதிபதி, காவல்துறை ஆய்வாளர், உதவி ஆய்வாளர் உள்ளிட்ட 7 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.  

இந்த சாதி ஆணவக் கொலை வழக்கில் 81 சாட்சிகள் விசாரிக்கப்பட்ட நிலையில் 36 பேர் பிறழ் சாட்சிகளாக மாறினார்கள். வழக்கு விசாரணை முடிந்த நிலையில் 15 பேரில் 13 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கப்பட்டது.

விருத்தாசலம் அருகே உள்ள குப்பநத்தம் புதுக்காலனியைச் சேர்ந்த சாமிகண்ணு மகன் முருகேசன் (25), தலித் சமுதாயத்தைச்சேர்ந்தவர். முருகேசனும், வேற்று சாதியை சேர்ந்த கண்ணகியும் (22)  காதலித்து வந்தனர். இரு குடும்பத்திலும் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என்பதால் இருவரும் 5-5-2003 அன்று கடலூரில் பதிவுத் திருமணம் செய்துகொண்டனர்.

Also Read | சிரிச்சது குத்தமா!! ஹோட்டலில் இருதரப்பினரிடையே மோதல்

கண்ணகியை காணாமல் தேடிய அவரது உறவினர்களுக்கு, தகவல் தெரிந்ததும் முருகேசனின் சித்தப்பா அய்யாசாமி மூலமாக ஜூலை 8 - ஆம் தேதி முருகேசனையும் , கண்ணகியையும் அருகிலுள்ள மயானத்துக்கு அழைத்துச் சென்று இருவருக்கும் மூக்கு , காது வழியாக விஷத்தை செலுத்தி அவர்களைக் கொலை செய்து, சடலங்களை தனித்தனியாக எரித்துள்ளனர் .

சம்பவம் குறித்து முருகேசனின் உறவினர்கள் விருத்தாசலம் காவல் துறையினரிடம் தெரிவித்தபோது அவர்கள் நடவடிக்கை எடுக்காததோடு, சம்பவத்தை மூடிமறைத்தாக கூறப்படுகிறது. ஆனால், அடுத்த சில நாட்களில் ஆணவக் கொலை சம்பவம் ஊடகங்களில் வெளியானதால் விருத்தாசலம் காவல் துறையினர் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்தனர். 

முருகேசனும், கண்ணகியும் சாதி மாறி திருமணம் செய்ததால் அவர்களது குடும்பத்தினர் தங்களது பிள்ளைகளை கொலை செய்ததாகக் கூறி இரு தரப்பிலிருந்தும் தலா 4 பேரை கைது செய்யப்பட்டனர். இவை, ஆணவக் கொலைகள் என்பதால் 2004ம் ஆண்டில் வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது. 

Read Also | திண்டுக்கல்லில் தொடரும் பயங்கரம்; ஜவுளி வியாபாரி தலை துண்டித்து படுகொலை

அதே ஆண்டில் சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில், அப்போதைய விருத்தாசலம் காவல் நிலைய ஆய்வாளர் செல்லமுத்து, உதவி ஆய்வாளர் தமிழ்மாறன் உள்ளிட்ட 15 பேரை வழக்கில் குற்றவாளிகளாகச் சேர்த்தது.  81 பேர் சாட்சியாக சேர்க்கப்பட்டனர்.  

இந்த ஆணவக் கொலை வழக்கு பத்து பிரிவுகளின் பதிவு செய்யப்பட்டது.  வழக்கின் முக்கிய சாட்சியான செல்வராஜ் மிரட்டல் காரணமாக 31.08.2017 அன்று தற்கொலை செய்து கொண்டார்.

இந்த வழக்கு கடலூர் எஸ்சி / எஸ்டி பிரிவு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது. 07.04.2021 வழக்கு விசாரணை முடிந்தது.

Read Also | பிரபல மகாபாரத பாடல், சுலோகங்களை பிசிறில்லாமல் பாடும் இஸ்லாமியர்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News