ரஜினிகாந்த் தனது பிறந்த நாளில் புது கட்சி பற்றி அறிவிப்பு?

தனது பிறந்த நாளில் புது கட்சி பற்றி அறிவிப்பை வெளியிடுகிறார் நடிகர் ரஜினிகாந்த் என தகவல்.

Updated: Nov 10, 2017, 04:48 PM IST
ரஜினிகாந்த் தனது பிறந்த நாளில் புது கட்சி பற்றி அறிவிப்பு?
Zee Media

தனது பிறந்த நாளில் புது கட்சி பற்றி அறிவிப்பை வெளியிடுகிறார் நடிகர் ரஜினிகாந்த் என தகவல்.

12 வருடங்களுக்கு பிறகு கடந்த மே மாதம் தனது ரசிகர்களை சந்தித்தார். தனது ரசிகர்கள் சந்திப்பில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், போர் வரும் போது பார்த்துக்கொள்வோம். அதுவரை அமைதியாக இருங்கள் என தனது அரசியலில் நுழைவை பற்றி முதல் முறையாக பேசினார்.

இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் பிறந்த நாளான டிசம்பர் 12-ம் தேதி தனது அரசியல் பிரவேசம் குறித்தும், புது கட்சி குறித்தும் அறிவிப்பை அறிவிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின உள்ளன. இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன எனவும், ரஜினிகாந்த் வலதுசாரி கட்சியிலோ அல்லது இடதுசாரி கட்சியிலோ சேர மாட்டார் என்றும், மாறாக, அவர் தனது சொந்த கட்சியை உருவாக்குவார் எனவும் தகவல்கள் வந்துள்ளன.

அதேபோல ரஜினியின் நெருங்கிய நண்பர் நடிகர் கமல்ஹாசன் தனது பிறந்த நாளில், நான் அரசியலுக்கு வந்துவிட்டேன். கட்சி தொடங்குவதை அமைதியாகத்தான் செய்ய முடியும். கட்சியின் பெயர் விரைவில் அறிவிப்பேன் என கூறியிருந்தார். மக்கள் தன்னுடன் நேரடியாக தொடர்பு கொள்ள மொபைல் ஆப் ஹேஸ்டேக் வெளியிட்டார். 

விரைவில் இருபெரும் நடிகர்கள் தமிழக அரசியலில் நுழைவார்கள் என எதிர் பார்க்கப்படுகிறது.