என்னை நீக்க யாராலும் முடியாது: டி.டி.வி.தினகரன்

Last Updated: Friday, August 11, 2017 - 15:04
என்னை நீக்க யாராலும் முடியாது: டி.டி.வி.தினகரன்

அ.தி.மு.க. அணிகள் இணைப்பு குறித்து பல பரபரப்பான தகவல்கள் வெளி வந்துகொண்டிருக்கும் இந்நிலையில், அ.தி.மு.க. அம்மா அணி துணை பொது செயலாளர் டி.டி.வி.தினகரன் தஞ்சையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது;-

அ.தி.மு.க. வின் இந்த பரபரப்பிற்காக சுழலுக்கு என்னால் பொறுபேற்க முடியாது. எதிர்கால இயக்க வளர்ச்சிக்கான நடவடிக்கைகளை நான் துணிச்சலுடன் மேற் கொள்வேன். ஆனால் அச்செயல்கள் எப்போது தேவைப்படுமோ அப்போது தானாக நடக்கும். கட்சியின் வளர்ச்சிக்காக எந்த ஒரு நடவடிக்கையும் நான் எடுக்க தயங்க வேண்டிய அவசியம் இல்லை.

 

 

அ.தி.மு.க.வின் முழு அதிகாரமும் பொது செயலாளரிடமே உள்ளது. உறுப்பினர்களை நீக்குவதும் சேர்ப்பதும் அவர் எடுக்கும் முடிவிலே உள்ளது. என்னை நீக்க பொது செயலாளரை தவிர வேறு யாராலும் முடியாது.

என தெரிவித்தார்.

comments powered by Disqus