தினகரனை "420" என புகழ்ந்த முதல்வர் பழனிசாமி

Last Updated: Friday, August 11, 2017 - 16:26
தினகரனை "420" என புகழ்ந்த முதல்வர் பழனிசாமி

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. அம்மா அணி துணை பொது செயலாளர் டி.டி.வி.தினகரனை 420 என குறிபிட்டுள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற குடியரசு துணைதலைவர் பதவியேற்பு விழாவிற்கு பிறகு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது.

தன்னை 420 என்று டிடிவி தினகரன் கூறியது அவருக்கே பொருந்தும் என தெரிவித்தார், மேலும் அணிகள் இணைப்பு குறித்து கேட்டதற்கு, அ.தி.மு.க. பொது செயலளராக சசிகலா மற்றும் தினகரன் கழக பதவியில் இருப்பதை அ.தி.மு.க. தொண்டர்கள் ஏற்றுக்கொல்லவில்லை எனவும், தொண்டர்கள் விரும்பும் முடிவு விரைவில் எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

comments powered by Disqus