நீட்க்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம்!

Updated: Sep 13, 2017, 12:22 PM IST
நீட்க்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம்!

நீட் தேர்விற்கு எதிராக சென்னையில் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஒன்று இணைந்து ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். 

இந்த ஆர்பாட்டமானது அரசியல் நோக்கத்திற்கானது அல்ல மாணவி அனிதாவின் மரணத்துக்கு நீதி கோரும் நிகழ்வு மட்டுமே என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

இந்த ஆர்பாட்டத்தில் ஸ்டாலின், திருமாவளவன், தா.பாண்டியன், பீட்டர் அல்போன்ஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். மாணவி அனிதா மரணத்துக்கு நீதி கோரியும், மத்திய மாநில அரசுகளை கண்டித்தும் இந்த ஆர்பாட்டம் நடந்து வருகின்றது.

 

 

இதேபோல் தமிழகம் முழுவதும் அனைத்து கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.