பொங்கல் பண்டிகை: தமிழிசை சவுந்திரராஜன் வாழ்த்து

நாளை உழவர் திருநாளாம் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுவதை முன்னிட்டு பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் அறிக்கையில் வாழ்த்து வெளியிட்டு உள்ளார். அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,

Updated: Jan 13, 2018, 10:17 AM IST
பொங்கல் பண்டிகை: தமிழிசை சவுந்திரராஜன் வாழ்த்து

நாளை உழவர் திருநாளாம் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுவதை முன்னிட்டு பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் அறிக்கையில் வாழ்த்து வெளியிட்டு உள்ளார். அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,

பொங்கல் திருநாள் மகிழ்ச்சிப் பொங்கலாக அனைவருக்கும் பொங்கல் தின நல்வாழ்த்துக்கள் என 

இன்று நமது இளைஞர்களோடு சேர்ந்து நமது மோடி அரசு மீட்டெடுத்த ஜல்லிக்கட்டோடு பொங்கல் நடைபெறுவதே நம் அனைவருக்கும் கிடைத்த வெற்றியாகும். 

கரும்புக்கட்டோடு கொண்டாடும் இந்த விழாவிற்கு காரணமான விவசாயிகளின் பயிரும் காப்பாற்றப்பட வேண்டும், உயிரும் காப்பாற்றப்பட வேண்டும் என்ற நோக்கில் நதிகள் இணைத்து நாடு முழுவதும் செழிக்க இந்த பொங்கல் வழிவகை செய்யட்டும்.

கடலில் வீணாகும் கோதாவரி நீரை காவிரிக்கு கொண்டுவந்து இணைத்து காவிரி டெல்டா பகுதி விவசாயிகளை காக்க திட்டம் தீட்டி உள்ள எங்கள் காவிய தலைவர் மோடி அவர்களுக்கு நன்றி.

கோடனக்கோடி விவசாயிகளுக்கு மண்வள பரிசோதனை அட்டை வழங்கி பூச்சி தாக்காத வேம்பு பூசிய விதைகளை வழங்கி பயிர் காப்பீடு இன்சூரன்ஸ் திட்டம் வழங்கி விவசாயிகளின் உயிர் காத்த மோடி அரசுக்கு இந்நன்னாளில் நன்றி கூறி வரவிருக்கும் பட்ஜெட்டில் விவசாயமே முன்னுரிமை பெரும் என்ற நமது பிரதமரின் இனிப்பான செய்தியே பொங்கலுக்கு பாஜக அரசின் வாழ்த்தாகும்.

நாடு முழுவதும் செழிக்க தமிழ்நாடும், தமிழ் மொழியும், தமிழர் திருநாளில் செழித்தோங்க வேண்டும்.

லஞ்சம் ஒழிந்து, வறுமை ஒழிந்து 
வாழ்க்கை செழிக்க அன்புடன் வாழ்த்துகிறேன். 

இவ்வாறு அறிக்கை வெளியிட்டு உள்ளார்.