மக்கள் நலன் கருதி பொங்கலுக்கு 11,983 சிறப்பு பேருந்துகள் இயக்கம் -அமைச்சர் அறிவிப்பு

பொங்கல் பண்டிகை வருவதையொட்டி தமிழகம் முழுவது சிறப்பு பஸ்கள் இயக்கம் முடிவு செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

Updated: Jan 3, 2018, 07:27 PM IST
மக்கள் நலன் கருதி பொங்கலுக்கு 11,983 சிறப்பு பேருந்துகள் இயக்கம் -அமைச்சர் அறிவிப்பு
Zee News Tamil

இன்று சென்னை பல்லவன் இல்லத்தில் போக்குவரத்து அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் பொங்கல் பண்டிகைக்காக சிறப்பு பஸ்கள் இயக்கம் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கூறியதாவது:

பொங்கல் பண்டிகைக்கு மக்களுக்கு எந்தவித சிரமம் இன்றி தங்கள் சொந்த ஊருக்கு சென்று வர 11,983 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். வரும் 11-ம், 12-ம் மற்றும் 13ம் தேதிகளில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். இதற்காக முன்பதிவு செய்ய 29 சிறப்பு டிக்கெட் விற்பனை மையங்கள் அமைக்கப்படும். இந்த சிறப்பு மையங்களில் வரும் ஜனவரி 9-ம் தேதி முதல் 13-ம் தேதி முன்பதிவு செய்துக்கொள்ளலாம். 

மேலும் பண்டிகை முடிந்து சென்னைக்கு மக்கள் திரும்பி வர 3,500-க்கு மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படும். சென்னையில் கோயம்பேடு பேருந்தி நிலையத்தை தவிர்த்து மேலும் ஐந்து தற்காலிக பஸ் நிலையங்கள் செயல்படுத்தப்படும். இதன்மூலம் கிட்டத்தட்ட 6 லட்சம் பேர் பயன் அடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது என்று அமைச்சர் தமிழக போக்குவரத்து அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.