ஜனாதிபதி தேர்தல்: தமிழகத்தில் ஒட்டுப்பதிவு நிறைவு

Updated: Jul 17, 2017, 12:24 PM IST
ஜனாதிபதி தேர்தல்: தமிழகத்தில் ஒட்டுப்பதிவு நிறைவு

ஜனாதிபதி தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு இன்று நாடு முழுவதும் நடந்து வருகிறது. மாநிலம் முழுவதும் உள்ள சட்டசபை வளாகத்தில் எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள் தங்களின் ஓட்டுக்களை செலுத்தி வருகின்றனர். 

ஜூலை 20-ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது.

தமிழக சட்டசபை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் தமிழக முதல்-அமைச்சர் பழனிசாமி முதல் வாக்கை பதிவு செய்தார். 

ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வாக்களித்தார்.

கேரளாவை சேர்ந்த ஐ.யூ.எம்.எல். கட்சி எம்.எல்.ஏ அப்துல்லா சென்னையில் வாக்களித்தார். 

திமுக மூத்த தலைவர் துரைமுருகன் வாக்களித்தார். திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்  வாக்கை பதிவு செய்தார். 

232 தமிழக எம்.எல்.ஏக்கள், கேரளா எம்.எல்.ஏ, மத்திய அமைச்சர் பொன். ராதா வாக்களித்தனர் 

இந்நிலையில், தமிழகத்தில் ஜனாதிபதி தேர்தல் வாக்களிப்பு முடிவடைந்தது.