தனியார் குடிநீர் கேன் உற்பத்தியாளர்கள் இன்று முதல் ஸ்டிரைக்

Last Updated : May 28, 2017, 08:51 AM IST
தனியார் குடிநீர் கேன் உற்பத்தியாளர்கள் இன்று முதல் ஸ்டிரைக் title=

ஜிஎஸ்டி வரிவிதிப்பை கண்டித்து தனியார் குடிநீர் உற்பத்தியாளர்கள் இன்று வேலை நிறுத்தத்தில் இறங்கியுள்ளனர். 

இந்த வேலை நிறுத்தத்தால் சென்னை, புறநகர் பகுதிகளில் மற்றும் காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டம் குடிநீர் கேன் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் குடிநீர் கேன்களுக்கான 18% ஜிஎஸ்டி-யை திரும்ப பெற கோரி தனியார் குடிநீர் உற்பத்தியாளர்கள் இன்று மாலை முதல் கால வரம்பற்ற வேலை நிறுத்தத்தில் இறங்கியுள்ளன

Trending News