மீண்டும் தொடங்கிய வடகிழக்கு பருவமழை!!

Updated: Nov 10, 2017, 10:53 AM IST
மீண்டும் தொடங்கிய வடகிழக்கு பருவமழை!!
Zee News Tamil

தமிழகத்தில் வளி மண்டல் மேலடுக்கு சுழற்சி காரணமாக வடகிழக்கு பருவமழை மீண்டும் தொடங்கியுள்ளதால், வடதமிழகம் முழுவது மழை பெய்யத் தொடங்கியுள்ளது..

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வரும் நிலையில் சென்னையில் கடந்த ஐந்து நாட்களாக மழை ஏதும் இல்லை. இந்நிலையில் 

அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் பரவலாக மழைக்கு வாய்ப்பு. கடலோர மாவட்டங்களில் மிதமான மழையும், சென்னையில் ஒரு சில முறையும் மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவித்து உள்ளது.

இதனை தொடர்ந்து  சென்னை உட்பட வட தமிழகம் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இன்று முதல் அடுத்த நான்கு நாட்களுக்கு தமிழக கடலோர பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.