ஆர்கே நகர் பணப்பட்டுவாடா: கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு அனுமதி மறுப்பு - திமுக வெளிநடப்பு

ஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா விவகாரம் தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவர அனுமதி மறுக்கப்பட்டதால் திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

Updated: Dec 21, 2017, 02:08 PM IST
ஆர்கே நகர் பணப்பட்டுவாடா: கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு அனுமதி மறுப்பு - திமுக வெளிநடப்பு
Pic Courtesy : ANI

ஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா விவகாரம் தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவர அனுமதி மறுக்கப்பட்டதால் திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

இன்று சட்டப்பேரவையில் கேள்வி நேரம் முடிந்தவுடன், திமுக உறுப்பினர்கள் ஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா புகாரில் தேர்தல் ஆணையம் பரிந்துரை தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.

ஆனால் அதற்கு அனுமதி மறுக்கப்பட்டதால் திமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து திமுக உறுப்பினர்கள் சட்டப் பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

கடந்த ஏப்ரல் மாதம் 12-ம் தேதி  நடைபெறவிருந்த ஆர்.நகர். தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக அம்மா அணி சார்பில் போட்டியிட்ட தினகரனுக்கு வாக்களிப் பதற்காக வாக்காளர் களுக்குத் தலா 4000 ரூபாய்  வீதம் பணம் கொடுக்கப் பட்டதாகக் குற்றச் சாட்டுக்கள் எழுந்தன.

இதற்கு பல ஆதாரங்களும் கிடைத்த நிலையில் இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் ஒத்திவைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.