வாடகைக்கு கார் ஓட்டுபர்களுக்கு தமிழக அரசின் புதிய விதிமுறை!!

ஒரு நாளுக்கு 8 மணி நேரத்துக்கு மேல் மற்றும் வாரத்திற்கு 48 மணி நேரத்துக்கு மேல் வாடகைக்கு கார் ஓட்டினால் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்படும் என தமிழக அரசு கூறியுள்ளது. 

Updated: Dec 7, 2017, 09:30 AM IST
வாடகைக்கு கார் ஓட்டுபர்களுக்கு தமிழக அரசின் புதிய விதிமுறை!!

ஒரு நாளுக்கு 8 மணி நேரத்துக்கு மேல் மற்றும் வாரத்திற்கு 48 மணி நேரத்துக்கு மேல் வாடகைக்கு கார் ஓட்டினால் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்படும் என தமிழக அரசு கூறியுள்ளது. 

இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை:-

சாலை விபத்துக்களும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் மிகுந்த கவலை அளிப்பதாக உள்ளது. தமிழ்நாட்டில் 2016ம் ஆண்டு 17,218 நபர்களும், 2017ம் ஆண்டு (அக்டோபர் மாதம் முடிய) 14,077 நபர்களும் சாலை விபத்தில் உயிரிழந்துள்ளனர். சாலை விபத்துகள் குறித்த புள்ளி விவரங்களை ஆய்வு செய்ததில் 90 விழுக்காடு சாலை விபத்துக்கள் நீண்ட நேரம்
வாகனத்தை இயக்கும் ஓட்டுநர்களால் மற்றும் அதனால் ஏற்படும் களைப்பு மற்றும் மன உளைச்சல்களால் ஏற்படுகிறது என தெரியவருகிறது. தமிழகத்தில் ஏற்படக்கூடிய சாலை விபத்து மற்றும் உயிரிழப்புக்களுக்கு டூரிஸ்ட் டேக்சி மற்றும் மேக்சி கேப் ஓட்டுநர்களுக்கும் பெரும் பங்கு உள்ளது. 

டூரிஸ்ட் டேக்சி மற்றும் மேக்சி கேப் ஓட்டுநர்களால் ஏற்படும் சாலை விபத்துக்கள் மற்றும் அதனால் ஏற்படும் உயிரிழப்புக்களை குறைக்கும் பொருட்டு 1988ம் ஆண்டு மோட்டார் வாகன சட்டம் மற்றும் மோட்டார் போக்குவரத்து தொழிலாளர்கள் சட்டம் 1961ல் குறிப்பிடப்பட்டுள்ள சட்ட வரையறைகளை கடைபிடிக்குமாறு தகுந்த அறிவுரைகள்
சாலைப் பாதுகாப்பு ஆணையர் அவர்களால் வழங்கப்பட்டுள்ளது. அதற்கிணங்க டூரிஸ்ட் டேக்சி மற்றும் மேக்சி கேப் ஓட்டுநர்கள் ஒரு நாளுக்கு 8 மணி நேரத்திற்கு மிகாமலும், ஒரு வாரத்திற்கு 48 மணி நேரத்திற்கு மிகாமலும் மற்றும் வாரத்திற்கு ஒரு நாள் ஓய்வுடன் வாகனங்களை இயக்குதல் வேண்டும்.

டூரிஸ்ட் டேக்சி மற்றும் மேக்சி கேப் ஓட்டுநர்கள் ஒரு பணி முடித்த பின்னர் தொடர்ச்சியாக அடுத்த பணி செய்ய வலியுறுத்தக் கூடாது. ஆண்டு தோறும் மருத்துவ பரிசோதனை மற்றும் தனி நபர் விபத்துக் காப்பீடு அவசியம் வைத்திருத்தல் வேண்டும்.

சட்டவிதிகளை மீறும் டூரிஸ்ட் டேக்சி மற்றும் மேக்சி கேப் ஓட்டுநர்களின் ஓட்டுநர் உரிமத்தை தற்காலிக தடை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். சட்டவிதிகளை மீறும் வாகனத்தின் அனுமதிச் சீட்டு மற்றும் தகுதிச்சான்றுகள் போக்குவரத்து துறையினரால் புதுப்பிக்கப்படமாட்டாது. 

தமிழகத்தில் நடைபெறும் சாலை விபத்துக்கள் மற்றும் அதனால் ஏற்படும் உயிரிழப்புக்களை குறைக்கும் பொருட்டு மேற்கூறிய சட்ட விதிகள் பின்பற்றப்பட வேண்டும். எனவே விலைமதிப்பற்ற மனித உயிர்களைக் காக்கும் பொருட்டு அனைத்து தரப்பினரும் அரசுடன் ஒத்துழைக்கக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அரசு தரப்பில் தொறிவிக்கப்பட்டுள்ளது.

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by clicking this link

Close