போக்குவரத்து நெரிசல் அற்ற மாநகராக சேலம் உருவாக்கப்படும்: முதல்வர் உறுதி!!

போக்குவரத்து நெரிசல் அற்ற மாநகராக சேலம் உருவாக்கப்படும் என்று சேலம்-பெங்களூரு சாலையின் புதிய மேம்பால பணிக்கான அடிக்கல்நாட்டு விழாவில் முதல் அமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.  

Updated: Jan 13, 2018, 11:52 AM IST
போக்குவரத்து நெரிசல் அற்ற மாநகராக சேலம் உருவாக்கப்படும்: முதல்வர் உறுதி!!
Zee News Tamil

முதல் அமைச்சர் பழனிசாமி சேலம்-பெங்களூரு சாலையில் புதிய மேம்பால பணிக்கான அடிக்கல்லை இன்று நாட்டினார். 

அப்போது அவர் பேசும்பொழுது, புறவழிச்சாலை அமைக்க மத்திய அரசிடம் கோரிக்கை வைத்தோம். விமான நிலையம் போல அனைத்து நவீன வசதிகளோடு சேலத்தில் பஸ்போர்ட் அமைக்க மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி ஒப்புதல் அளித்துள்ளார்.

போக்குவரத்து நெரிசலை தவிர்க்க 21கொடியே 97 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சேலம் - பெங்களூரு சாலையின் இரும்பாலை சந்திப்பில் புதிய மேம்பாலத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அடிக்கல் நாட்டினார்.

சேலம் மாநகருக்கு தேவையான பாலங்கள் அமைக்க உத்தரவிட்டவர் ஜெயலலிதா.  இதுவரை யாரும் கவனிக்காத சேலம் ஜெயலலிதா கவனத்துக்கு கொண்டு சென்ற நிலையில் பாலங்கள் கிடைத்தன.

மேலும் சேலத்தில் ரூ 103.28 கோடி மதிப்பிலான திட்டப்பணிகளையும் முதலமைச்சர் பழனிசாமி துவக்கி வைத்தார்.தொடர்ந்து காவிரி நடுவர்மன்ற இறுதி ஆணை வெளியான தினத்தையொட்டி மேட்டூர் அணை முன் அமைக்கப்பட்டுள்ள நினைவு தூணையும் திறந்து வைக்கிறார்.