சர்கார் சர்ச்சை முடிவுக்கு வந்தது - சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கம்

மறு தணிக்கை செய்து சர்கார் படத்தின் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கி மீண்டும் திரையிடுவோம் என படக்குழு அறிவித்துள்ளது. 

Zee News Tamil (Web Team) Zee செய்திகள்(இணைய பிரிவு) | Updated: Nov 9, 2018, 02:18 PM IST
சர்கார் சர்ச்சை முடிவுக்கு வந்தது - சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கம்
Pic Courtesy : Twitter

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள 'சர்கார்' படம் தீபாவளியன்று திரைக்கு வந்தது. தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வெற்றி நடைபோட்டு வருகிறது. இந்நிலையில் இந்த திரைப்படத்தில் அரசியல் தலைவர்களை விமர்சிக்கும் வகையில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம்பெற்றுள்ளது எனவும், சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கக்கோரி அ.தி.மு.க-வினர் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் திரையரங்குகளில் வைக்கப்பட்டு இருந்த நடிகர் பேனர்களை கிழித்தனர். இதனால் சில இடங்களில் கட்சிகள் ரத்து செய்யப்பட்டது.

சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை என அதிமுக தரப்பில் கூறப்பட்டது. இதனையடுத்து சர்கார் படத்தின் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்குவதாக தியேட்டர் உரிமையாளர் சஙகம் ஒப்புதல் அளித்திருந்தது. 

இந்நிலையில், மறு தணிக்கை செய்து சர்கார் படத்தின் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கி மீண்டும் திரையிடுவோம் என படக்குழு அறிவித்துள்ளது. இதன்மூலம் சர்கார் பட சர்ச்சை முடிவுக்கு வந்துள்ளது.

மறு தணிக்கை சர்கார் படம் மாலை முதல் திரையிடப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.