ஓபிஎஸ்-க்கு நடிகை லதா ஆதரவு!!

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து நடிகை லதா தமது ஆதரவைத் தெரிவித்துள்ளார். 

Last Updated : Mar 5, 2017, 02:23 PM IST
ஓபிஎஸ்-க்கு நடிகை லதா ஆதரவு!! title=

சென்னை: தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து நடிகை லதா தமது ஆதரவைத் தெரிவித்துள்ளார். 

அதிமுகவின் உண்மையான விசுவாசிகள் ஓ. பன்னீர்செல்வம் அணியில் இணைய வேண்டும் எனவும் லதா வேண்டுகோள் விடுத்துள்ளார். ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அதிமுக இரண்டாக பிளவுபட்டுள்ளது. சசிகலா, ஓ. பன்னீர்செல்வம் அணிகள் குற்றம்சாட்டி வந்தனர்.

அதிமுகவைச் சேர்ந்த 12 எம்பிக்கள், 11 எம்எல்ஏக்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் பலர் ஓ. பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்து வந்தனர். 

இந்நிலையில் திடீரென ஓ. பன்னீர்செல்வம் அணியிலிருந்து அதிமுக முக்கிய நிர்வாகிகள் சசிகலா அணிக்கு தாவி வருகின்றனர். 

இந்நிலையில் தற்போது முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தை திடீரென அவரது இல்லத்தில் சந்தித்து நடிகை லதா ஆதரவு தெரிவித்தார். 

Trending News