பட்டியலின மாணவன் மீது தாக்குதல்... 5 சிறுவர்கள் கைது - தென் தமிழகத்தில் அதிகரிக்கிறதா சாதிய மோதல்?

Kovilpatti Student Attack: கோவில்பட்டி அருகே உள்ள கழுகுமலையில், பட்டியலின மாணவர் மீது தாக்குதல் நடத்திய மாற்று சமூகத்தைச் சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

Written by - Sudharsan G | Last Updated : Aug 20, 2023, 09:34 AM IST
  • இதில் 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
  • பாதிக்கப்பட்ட மாணவன் 11ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
  • போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பட்டியலின மாணவன் மீது தாக்குதல்... 5 சிறுவர்கள் கைது - தென் தமிழகத்தில் அதிகரிக்கிறதா சாதிய மோதல்? title=

Kovilpatti Student Attack: கோவில்பட்டி அருகேயுள்ள கழுகுமலை லட்சுமிபுரத்தில் பட்டியலின  மாணவர் மீது ‌மாற்று சமுகத்தைச் சேர்ந்த மாணவர்கள் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது. மாணவர்களின் சண்டையை தடுத்து நிறுத்திய பட்டியலின பள்ளி மாணவரின் வீட்டுக்குச் சென்று அவர் தாக்குதல் நடத்தியுள்ளனர். காயம் அடைந்த மாணவர் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள லட்சுமிபுரம் கிராமத்தைச் சேர்ந்த மூர்த்தி என்பவருக்கு 17 வயதில் நவீன் (இருவரின் பெயரும் மாற்றப்பட்டுள்ளது) என்ற மகன் உள்ளார். இவர் பட்டியலின வகுப்பினை சேர்ந்தவர்.‌ கழுகுமலை அரசு மேல்நிலைப்பள்ளி  11ஆம் வகுப்பு காமர்ஸ் ( கணக்குப்பதிவியல்) பிரிவில் படித்து வருகிறார். 

அதை பள்ளியில் கழுகுமலையை சேர்ந்த சுந்தர் (17),  சிவா (17)  ஆகியோர் 11ஆம் வகுப்பு அறிவியல் பாட பிரிவில் பயின்று வருகின்றனர்.  இந்நிலையில் நேற்று மாலையில் பள்ளிக்கு வெளியே சுந்தர், சிவா இருவரும் வெளியே சண்டை போட்டதாக கூறப்படுகிறது. அப்போது அந்த வழியாக வந்த மாணவர் நவீன் இருவரும் சண்டை போடுவதை தடுத்ததாக கூறப்படுகிறது. 

மேலும் படிக்க | சாதியை மையப்படுத்திய படங்களால் மாணவர்கள் பாதிப்பு - அண்ணாமலை

இந்நிலையில் சுந்தர் 10 பேரை அழைத்துக்கொண்டு நேற்று இரவில் லெட்சுமிபுரம் சென்று நவீனை ஜாதி ரீதியாக திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் நவீன் காயம் அடைந்தார். அவரது செல்போன் முற்றிலுமாக சேதம் அடைந்தது. காயம் அடைந்த நவீன் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து கழுகுமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த விவகாரத்தில் 10 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  இதில் 11ம் வகுப்பு மாணவன் சுந்தர் (17), 12ஆம் வகுப்பு மாணவர் தினேஷ் (17), கல்லூரி மாணவர்கள் சங்கர் (17), மகேஷ் (17) மற்றும் குரு (17) ஆகிய 5 பேரை கைது செய்தனர். மேலும் அடையாளம் தெரிந்த 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர். (இதில் கைதான அனைவரும் சிறுவர்கள் என்பதால் அவர்களின் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன).

ஏற்கனவே திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி பள்ளியில் பட்டியலின வகுப்பினை  சேர்ந்த மாணவர் மற்றும் அவரது தங்கை தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. தற்போது, திருநெல்வேலிக்கு அடுத்த தூத்துக்குடி மாவட்டத்தின் கழுகுமலை பகுதியில் பட்டியலின  மாணவர் மீது ‌மாற்று சமுதாயங்களைச் சேர்ந்த மாணவர்கள் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது. 

கடந்த ஆக. 9ஆம் தேதி இரவு, நாங்குநேரியில் பட்டியிலன மாணவனின் வீடு புகுந்து ஒரு கும்பல் அவனை அரிவாளால் வெட்டியது. அப்போது அதை தடுக்க சென்ற அவரது தங்கைக்கும் கையில் விட்டு விழுந்தது. படுகாயம் அடைந்த இருவரும் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 

இதனால் அதிர்ச்சியில் அந்த மாணவனின் தாத்தா கிருஷ்ணன் என்பவர் மாரடைப்பால் உயிரிழந்தார். முதலமைச்சர் ஸ்டாலின், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்டோர் இச்சம்பவம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். மேலும் அந்த மாணவின் மருத்துவச்செலவு, உயர்கல்விக்கான செலவு ஆகியவற்றை தான் ஏற்றுக்கொள்வதாக அன்பில் மகேஷ் வாக்குறுதி அளித்துள்ளார். 

மேலும் படிக்க | “என்ன ஜென்மம்டா நீங்க எல்லாம்..” வகுப்பறையில் மனித மலம்-கொந்தளித்த பிரபல நடிகர்..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News