விரைவில் தமிழகத்தில் சட்டசபைக்கு தேர்தல் - ஓ.பன்னீர்செல்வம்

Updated: May 6, 2017, 10:38 AM IST
விரைவில் தமிழகத்தில் சட்டசபைக்கு தேர்தல் - ஓ.பன்னீர்செல்வம்
Zee Media Bureau

விரைவில் தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் வருவதற்கான வாய்ப்பு என ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

ஜெயலலிதா மரணத்திற்கு நீதி கேட்டு ஓ.பன்னீர்செல்வம் பயணம் தொடங்கினார். நேற்று காஞ்சிபுரத்தில் இருந்து தனது பயணத்தை ஆரம்பித்த ஓ.பன்னீர்செல்வம் அங்கு நடைபெற்ற கூட்டத்தில் கலந்துக்கொண்டார்.

அப்பொழுது அவர் கூறியதாவது:-

ஜெயலலிதா மர்ம மரணத்தின் முடிச்சை அவிழ்க்க வேண்டும் என்பதுதான் இந்த தர்மயுத்தத் தின் நோக்கம். அதற்குத்தான் சிபிஐ விசாரணை வேண்டும் என கோரிக்கை விடுத்தோம். அதிமுக ஒரு குடும்பத்தின் கையில் சிக்கக்கூடாது.

முதல்வர் பழனிசாமி தரப்பினர் தடம்மாறிச் சென்று எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு துரோகம் செய்துவிட்டனர். அவர்களுக்கு விடுதலை கிடையாது. 

மேலும் அவர் கூறும் போது தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பாக சட்டசபை தேர்தல் வர வாய்ப்புள்ளது என்றார். 

இந்த கூட்டத்தில் மைத்ரேயன், இ.மதுசூதனன், கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், பாண்டியராஜன், முன்னாள் எம்எல்ஏ வெங்கட்ராமன், முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.