தென்மண்டல துப்பாக்கிசுடும் போட்டி: பதக்கங்களை வழங்கினர் முதல்வர்!

Updated: Aug 26, 2017, 06:52 PM IST
தென்மண்டல துப்பாக்கிசுடும் போட்டி: பதக்கங்களை வழங்கினர் முதல்வர்!
Pic Courtesy: @tn.gov.in

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் இன்று (ஆகஸ்ட் 26) திருவள்ளுர் மாவட்டம், ஆவடி, வீரப்புரத்தில் நடைபெற்ற 9வது தென் மண்டல துப்பாக்கி சுடும் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்கள் வழங்கும் விழாவில், வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்களை வழங்கினர்.

இந்த நிகழ்வின்பொது ஊரக தொழில்துறை அமைச்சர் பி.பெஞ்சமின், தமிழ் ஆட்சி மொழி மற்றும் பண்பாடு துறை அமைச்சர் கே.பாண்டியராஜன், பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் வேணுகோபால், தமிழ்நாடு காவல் துறை இயக்குனர் டி.கே.ராஜேந்திரன், சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் ஏ.கே.விசுவநாதன், திருவள்ளூர் மாவட்ட ஆட்சி தலைவர் எ.சுந்தரவல்லி மற்றும் காவல்துறை உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by clicking this link

Close