சென்னையில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் கூட்டம்!

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் கூட்டம், சென்னை மாவட்ட ஆட்சியர் திரு.வெ.அன்புச்செல்வன், இ.ஆ.ப அவர்கள் தலைமையில் இன்று நடைப்பெற்றது.

Updated: Jan 3, 2018, 03:34 PM IST
சென்னையில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் கூட்டம்!
Pic Courtesy: Information and Public relations office, Chennai

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் கூட்டம், சென்னை மாவட்ட ஆட்சியர் திரு.வெ.அன்புச்செல்வன், இ.ஆ.ப அவர்கள் தலைமையில் இன்று நடைப்பெற்றது.

சென்னை மாவட்ட ஆட்சியார் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியார் திரு.வெ.அன்புச்செல்வன். இ.ஆ.ப அவர்கள் தலைமையில் இன்று (03.01.2018) மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் மாற்றுத்திறனாளிகளின் குறைகளை கேட்டு, கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். 

இக்கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் மாதாந்திர உதவித் தொகை, அடையாள அட்டை, பெட்ரோல் ஸ்கூட்டர், உதவி உபகரணங்கள், உள்ளிட்ட தங்கள் கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியாரிடம் அளித்தனர். அம்மனுக்கள் தொடர்பான விபரங்களை தொடர்புடைய அலுவலர்களிடம் கேட்டு, உடனடி நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by clicking this link

Close