பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு : முழு கண்ணோட்டம் !!

Updated: May 19, 2017, 03:58 PM IST
பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு : முழு கண்ணோட்டம் !!
Zee Media Bureau

தமிழகத்தில் இன்று 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது.

இந்த பத்தாம் வகுப்பு தேர்வில் ரேங்க் முறை மாற்றப்பட்டு ஏ, பி, சி என்ற கிரேடு முறை பின்பற்றப்படுகிறது.

இந்த வகையில்,

481 மதிப்பெண்களுக்கு அதிகமாக எடுத்த மாணவர்கள் 38,613 பேராகவும்

450 முதல் 480 வரை எடுத்த மாணவர்கள் 1,22,757 பேராகவும்

426 முதல் 450 வரை எடுத்த மாணவர்கள் 1,13,831 பேராகவும்

401 முதல் 425 வரை எடுத்த மாணவர்கள் 1,11,266 பேராகவும்

301 முதல் 400 வரை எடுத்த மாணவர்கள் 3,66948 பேராகவும் உள்ளனர்.

94.4% மாணவர்கள் தேர்ச்சி:-

தமிழகத்தில் வெளிவந்துள்ள 10-ம் வகுப்பு தேர்வில் 94.4% மாணவ, மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர். இதில் 96.2 சதவித மாணவிகள் தேர்ச்சி பெற்று உள்ளனர். மாணவர்கள் 92.5 சதவிதம் தேர்ச்சி பெற்று உள்ளனர். 

மாணவ-மாணவிகள் 'சென்டம்':-

* தமிழ் மொழிப்பாடத்தில் மொத்தம் 69 பேர் முழு மதிப்பெண் பெற்று உள்ளனர். 

* கணிதப்பாடத்தில் 13,759 பேர் முழு மதிப்பெண் பெற்று உள்ளனர். 

* அறிவியல் பாடத்தில் 17,481 பேர் முழு மதிப்பெண் பெற்று உள்ளனர். 

* சமூக அறிவியல் பாடத்தில் 61,115 பேர் முழு மதிப்பெண் பெற்று உள்ளனர். 

மாணவிகளே அதிக தேர்ச்சி:-

பத்தாம் வகுப்பு தேர்தல் முடிவுகளில் மொத்த தேர்ச்சி விகிதம் 94.4 சதவீதமாகவும், மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 92.5 சதவீதமாகவும், மாணவிகளின் தேர்ச்சி விகிதம் 96.2 சதவீதமாகவும் உள்ளது. வழக்கம் போல இந்த முறையும் மாணவிகள்தான் அதிக தேர்ச்சி பெற்றுள்ளனர்.

கடந்த ஆண்டை விட தேர்ச்சி விகிதம் 0.8% அதிகம்:-

10-ம் வகுப்பு தேர்வில் நடந்த ஆண்டை விட 0.8 சதவீதம் தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது. இதில் மாணவர்கள் 94.4 சதவீதம் தேர்ச்சி பெற்று உள்ளனர். மாணவியர் தேர்ச்சி 3.7 சதவீதம் அதிகரித்துள்ளனர். 

 

எந்த மாவட்டம் முதலிடம்:-

10ம் வகுப்பு தேர்ச்சி விகிதத்தில் 98.5% பெற்று விருதுநகர் மாவட்டம் முதலிடத்தில் உள்ளது. கன்னியாகுமரி 98.17% எடுத்து இரண்டாவது இடத்திலும்  ராமநாதபுரம் 98.16% எடுத்து மூன்றாவது இடத்திலும் உள்ளது. இதில் கடலூர் மாவட்டம் தேர்ச்சி விகிதத்தில் கடைசி இடத்தைப் பெற்றுள்ளது

அரசு பள்ளிகள் தேர்ச்சி விகிதம்:-

131 அரசு பள்ளிகளைச் சேர்ந்த 5113 மாணவ- மாணவிகள் 10-ம் வகுப்பு தேர்வு எழுதினர். இதில் 5000 பேர் தேர்ச்சி பெற்றனர்.  81 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளது.

புதுச்சேரியில் 143 பள்ளிகள் 100% தேர்ச்சி:-

புதுச்சேரியை சேர்ந்த பள்ளிகளுக்கு இன்று 10 ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகின. இதில் புதுச்சேரியில் உள்ள 143 பள்ளிகள் 10ம் வகுப்பு தேர்வில் 100% தேர்ச்சியை கொடுத்துள்ளன. கடந்தாண்டை விட 1.25% பேர் அதிகமாக தேர்ச்சி அடைந்துள்ளனர். இதில் வழக்கம் போல மாணவிகள் 95.90%, மாணவர்கள் 91.5% தேர்ச்சி பெற்றுள்ளனர். பாடவாரியாக 3,850 பேர் 100/100 மதிப்பெண் பெற்றுள்ளனர்.