"ஜனநாயகம் தலையை உயர்த்த காத்திருக்கிறது" - விஷால்!

ஜனநாயகம் மீண்டும் அதன் தலையை உயர்த்திப் பார்க்க காத்திருக்கிறது!

Updated: Dec 7, 2017, 11:52 AM IST
"ஜனநாயகம் தலையை உயர்த்த காத்திருக்கிறது" - விஷால்!
Pic Courtesy: @VishalKOfficial

ஆர்.கே.நகர் இடைதேர்தல் விவகாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நடிகர் விஷால் தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் புதிய ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

ஆர்.கே.நகர் இடைதேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவடைந்து அதில் அவருடைய வேட்புமனு நிராகரிக்கப்பட்டு பின்னர் ஏற்றுக்கொள்ளப்பட்டது. பின்னர் மீண்டும் நிராகரிக்கப்பட்டது.

தேர்தல் ஆணையத்தின் இந்த செயல்பாட்டால் வருத்தம் அடைந்த அவர் அதற்கான நியாத்தினை கோரி காத்திருக்கின்றர். இந்நிலையில் அவர் தற்போது தனது ட்விட்டர் பக்கத்தினில் இதுகுறித்து பதிவிட்டுள்ளதாவது!

இதில் "ஜனநாயகம் மீண்டும் அதன் தலையை உயர்த்திப் பார்க்க காத்திருக்கிறது, கடவுள் இந்த அராஜகத்திலிருந்து என் அன்பான நாட்டை காப்பாற்ற வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் "காலதாமதமாக கெடைக்கும் நீதிக்கு பயனேது" எனவும் அதில் குறிப்பிட்டுள்ளார். எந்த பதிவானது அவரது வருத்தத்தினையும், கோவத்தினையும் வெளிப்படுத்துவதாக தெரிகிறது!