தலைவர் கருணாநிதியிடம் ஆசி பெற்ற நடிகர் ரஜினிகாந்த்

திமுக தலைவர் கருணாநிதியை சந்திக்க கோபாலபுரம் இல்லத்திற்கு சென்றடைந்த நடிகர் ரஜினிகாந்த்.

Updated: Jan 3, 2018, 08:56 PM IST
தலைவர் கருணாநிதியிடம் ஆசி பெற்ற நடிகர் ரஜினிகாந்த்
Zee News Tamil

கிட்டதட்ட 10 நிமிடம் சந்திப்பிக்கு பிறகு வெளிவந்த நடிகர் ரஜினிகாந்த், அவருக்கு புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தேன். மேலும் தான் அரசியலில் களம் காண்பதால், அவரிடம் ஆசிர்வாதம் வாங்கினேன் என செய்தியாளர்களிடம் கூறினார்.


திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து நலம் விசாரித்த ரஜினிகாந்த். மேலும் அவருக்கு புத்தாண்டு வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.


திமுக தலைவர் கருணாநிதியை சந்திக்க கோபாலபுரம் இல்லத்திற்கு சென்றடைந்த நடிகர் ரஜினிகாந்த். அவரை வரவேற்ற செயல் தலைவர் மு.க. ஸ்டாலின். 


திமுக தலைவர் கருணாநிதியை மரியாதை நிமித்தமாக சந்திப்பதாகவும் தெரிவித்துள்ளார்.


நடிகர் ரஜினி கடந்த 31-ம் தேதி தான் அரசியலுக்கு வருவதாகவும், மேலும் வருகிற சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனிக்கட்சி தொடங்கி தனித்துப் போட்டியிட உள்ளதாகவும் தெரிவித்தார்.

இதனையடுத்து கட்சி தொடங்குவதற்கான பணிகளில் ரஜினி மும்முரமாக செயல்பட்டு வருகிறார். பிரத்யேக இணையதளத்தையும் ரஜினி தொடங்கியுள்ளார். தமிழ்நாட்டில் நல்ல ஒரு அரசியல் மாற்றத்தை விரும்பும் அனைத்து தரப்பு மக்களும் தங்களின் பெயர், வாக்காளர் அடையாள அட்டை எண் ஆகிய இரண்டையும் www.rajinimadram.org என்ற வலைதளபக்கத்தில் பதிவு செய்து உறுப்பினர் ஆகலாம் என்று ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், திமுக தலைவர் கருணாநிதியை சந்திக்க அவரது கோபாலபுரம் இல்லத்திற்க்கு தற்போது நடிகர் ரஜினிகாந்த் சென்றுள்ளார். கருணாநிதியை சந்திக்க செல்வதற்கு முன்பு செய்தியாளர்களிடம் மரியாதை நிமித்தமாக சந்திக்க செல்லுவதாக குறிப்பிட்டார்