10-ம் வகுப்பு தேர்வு: கடந்த ஆண்டை விட தேர்ச்சி விகிதம் 0.8% அதிகம்

Updated: May 19, 2017, 10:25 AM IST
10-ம் வகுப்பு தேர்வு: கடந்த ஆண்டை விட தேர்ச்சி விகிதம் 0.8% அதிகம்
Zee Media Bureau

10-ம் வகுப்பு தேர்வில் நடந்த ஆண்டை விட 0.8 சதவீதம் தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது. 

இதில் மாணவர்கள்:- 94.4 சதவீதம் தேர்ச்சி பெற்று உள்ளனர். 

மாணவியர் தேர்ச்சி:- 3.7 சதவீதம் அதிகரித்துள்ளனர். 

10ம் வகுப்பு தேர்ச்சி விகிதத்தில் 98.5% பெற்று விருதுநகர் மாவட்டம் முதலிடத்தில் உள்ளது. கன்னியாகுமரி 98.17% எடுத்து இரண்டாவது இடத்திலும்  ராமநாதபுரம் 98.16% எடுத்து மூன்றாவது இடத்திலும் உள்ளது.

தமிழகத்தில் 10-ம் வகுப்பு தேர்வில் 94.4% மாணவ, மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர். +2 தேர்வுக்கு அறிவித்தது போலவே பத்தாம் வகுப்பு தேர்விலும், மாநில, மாவட்ட அளவிலான முதல் 3 இடங்கள் இடம்பெறாது. 

தேர்வு எழுதிய மாணவர்கள் தங்கள் பதிவெண் மற்றும் பிறந்த தேதி, மாதம், வருடம் ஆகியவற்றை இணைய தளத்தில் பதிவு செய்து தேர்வு முடிவுகளை மதிப்பெண்களுடன் தெரிந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட இணையதளங்கள்:-

> www.tnresults.nic.in

> www.dge1.tn.nic.in

> www.dge2.tn.nic.in

ஆகிய இணையதளங்களில் மாணவ, மாணவிகள் தங்கள் 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகளை பார்க்கலாம்.

மேலும் மாணவர்களின் செல்போன் எண்களுக்கு தேர்வு முடிவுகள் எஸ்.எம்.எஸ் வாயிலாக அனுப்பப்பட்டது.