பொறியியல் படிப்பு கலந்தாய்வு ஜூலை 25 முதல் 29 வரை நடைபெறும்!!

பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வை ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து இன்று பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு அட்டவணையை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

Written by - Shiva Murugesan | Last Updated : Jul 21, 2018, 07:16 PM IST
பொறியியல் படிப்பு கலந்தாய்வு ஜூலை 25 முதல் 29 வரை நடைபெறும்!! title=

பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வை ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து இன்று பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு அட்டவணையை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் மருத்துவ கலந்தாய்வில் இடம் கிடைக்காத மாணவர்கள் தொடர்ந்து பொறியியல் கலந்தாய்வில் பங்கேற்பார்கள் என்ற எண்ணத்த்தில், இந்த ஆண்டு மருத்துவ கலந்தாய்வு முடிந்த பிறகு பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு நடத்தப்படுகிறது. 

பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு ஐந்து கட்டங்களாக நடைபெறும். 

வரும் 25 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரை கலந்தாய்வு நடைபெறும்.

கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவர்கள் முன்வைப்பு தொகையாக ரூ.5000 செலுத்த வேண்டும். 

எஸ்.சி மற்றும் எஸ்.டி மாணவர்கள் ரூ.1000 செலுத்த வேண்டும். முன்வைப்பு தொகை திருப்பித்தரப்படும்.

இன்று முதல் வரும் 24 ஆம் தேதி வரை முன்வைப்புத் தொகையை செலுத்தலாம் (கட் ஆப் மதிப்பெண்கள் 190 வரை)

இதை ஆன்லைன் மூலமாகவோ, உதவி மையங்களிலோ அல்லது டிடி வாயிலாக செலுத்தலாம்.

Trending News