மனித மாமிசம் சாப்பிட்டு போராட்டம் நடத்திய தமிழக விவசாயிகள்

Updated: Sep 13, 2017, 01:03 PM IST
மனித மாமிசம் சாப்பிட்டு போராட்டம் நடத்திய தமிழக விவசாயிகள்
Pic Courtesy : Twitter

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவேண்டும், விவசாய கடன்களை தள்ளுபடி செய்யவேண்டும், விளை பொருட்களுக்கு நியாயமான விலை வழங்கவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் டெல்லி ஜந்தர் மந்தரில் தமிழக விவசாயிகள் 60_வது நாளாக போராடி வருகின்றனர்.

தினமும் பல்வேறு வகையில் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அந்த வகையில் நேற்று தமிழக விவசாயிகள் மனித மண்டை ஓடு, கை, கால் எலும்பு துண்டுகளுடன் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் ஊர்வலமாக வந்து மனித மாமிசத்தை சாப்பிடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழக விவசாயிகளின் போராட்டம் மத்திய மாநில அரசுகளின் செவிகளுக்கு எட்டுமா? அவர்களின் கோரிக்கை நிறைவேறுமா?