தமிழகத்தில் BJP-வின் வளர்ச்சி பிற கட்சியினருக்கு எரிச்சல் -தமிழிசை...

தமிழகத்தில் பாஜகவின் வளர்ச்சி பிற கட்சியினரை எரிச்சல் அடையச் செய்திருக்கிறது என தமிழிசை சவுந்தரராஜன் விமர்சனம்..! 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 19, 2018, 11:31 AM IST
தமிழகத்தில் BJP-வின் வளர்ச்சி பிற கட்சியினருக்கு எரிச்சல் -தமிழிசை... title=

தமிழகத்தில் பாஜகவின் வளர்ச்சி பிற கட்சியினரை எரிச்சல் அடையச் செய்திருக்கிறது என தமிழிசை சவுந்தரராஜன் விமர்சனம்..! 

தமிழகத்தில் பாஜகவின் வளர்ச்சி பிற கட்சியினரை விமர்சனம் செய்ய வைக்கிறது. அரசியல் ரீதியாக தாம் வளரவில்லை என தி.மு.க பொருளாளர் துரைமுருகன் கருதினால், அவரது தலைவர் மு.க.ஸ்டாலினும் வளரவில்லை என்பதே தமது கருத்து.

நேற்று நடைபெற்ற தென் மாநில முதலமைச்சர்கள் மாநாட்டில், தமிழகத்திற்கு கிருஷ்ணா நதிநீர் கிடைக்க அனுமதி பெற்று தரப்பட்டுள்ளது. 

கடந்த 2011 சட்டப்பேரவைத் தேர்தலில் மின்வெட்டு பிரச்சினை யால் திமுக ஆட்சியை இழந்தது. எனவே, தற்போது இல்லாத மின்வெட்டு பிரச்சினையைக் கிளப்பி அதிமுக ஆட்சியை கலைத்துவிடலாம் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நினைக்கிறார் என்றார்.

மேலும் தமிழகத்துக்கு தேவையான நிலக்கரியை மத்திய அரசு வழங்கும். தமிழகத்தில் மின்வெட்டு வருவதற்கான வாய்ப்பே இல்லை. அப்படி வந்தாலும் அதை மத்திய பாஜக அரசு தடுத்து நிறுத்தும் என்றும் அவர் தெரிவித்தார்.

 

Trending News