கோவை வெடி விபத்து.. முபின் வாட்ஸ் அப்பில் ஐஎஸ்ஐஎஸ் ஸ்டேட்டஸ்?... அண்ணாமலையின் அடுத்த குண்டு

ஜமேசா முபின் இறப்பதற்கு முன் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பினர் பயன்படுத்தும் வாசகத்தை வாட்ஸ் அப் ஸ்டேட்டஸாக வைத்திருந்தாரென தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Written by - க. விக்ரம் | Last Updated : Oct 25, 2022, 05:13 PM IST
  • கோவையில் சிலிண்டர் வெடித்து விபத்து
  • ஒருவர் உயிரிழப்பு
  • உயிரிழந்தவர் ஐஎஸ் அமைப்பை சேர்ந்தவர் என அண்ணமலை தகவல்
 கோவை வெடி விபத்து.. முபின் வாட்ஸ் அப்பில் ஐஎஸ்ஐஎஸ் ஸ்டேட்டஸ்?... அண்ணாமலையின் அடுத்த குண்டு title=

கோவை உக்கடம் ஈஸ்வரன் கோயில் அருகே சென்றுகொண்டிருந்த காரில் இருந்த சிலிண்டர் கடந்த 24ஆம் தேதி வெடித்தது. அதில் காரை ஓட்டிச் சென்ற நபர் உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. உயிரிழந்தவர் பெயர் ஜமேசா முபின் என்பது தெரியவந்ததையடுத்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அப்போது, அந்த காரில் வெடிகுண்டு தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும் மூல பொருள்கள் இருந்ததாக தகவல் வெளியாகி அதிர்ச்சியை கிளப்பியது. இதனையடுத்து இந்த விவகாரம் பெரும் பரபரப்பை கிளப்பியது. சூழல் இப்படி இருக்க நேற்று சில சிசிடிவி காட்சிகள் சிக்கின.

அதில், கடந்த சனிக்கிழமை இரவு 11.25 மணிக்கு ஜமேசா முபின் வீட்டில் இருந்து முபின் உள்ளிட்ட 5 பேர் ஒரு மூட்டையில் பொருட்களை தூக்கிச் செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தன. தொடர்ந்து, முபினுடன் இருந்த அந்த 4 பேர் யார், அந்த மூட்டையில் என்ன இருந்தது என்பது குறித்த கேள்விகள் பலரிடம் எழுந்தன. நிலைமை இவ்வாறு செல்ல, உக்கடம் பகுதியை சேர்ந்த முகமது தல்கா(25 ), முகமது அசாருதீன்(23), ஜிஎம் நகரை சேர்ந்த முகமது ரியாஸ்(27), ஃபிரோஸ் இஸ்மாயில்(27), முகமது நவாஸ் இஸ்மாயில்(26) உள்ளிட்ட ஐந்து பேர் இன்று கைது செய்யப்பட்டனர்.

இதற்கிடையே கோவை கார் சிலிண்டர் வெடி விபத்துக்கு ஐஎஸ்ஐஎஸ் அமைப்பே காரணம் எனவும், முபினுக்கும் அந்த இயக்கத்துக்கும் தொடர்பிருப்பதாகவும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

Coimbatore Blast

இந்நிலையில் இன்று பாஜக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “  கோவை முற்றிலுமாக தீவிரவாதிகளின் கூடாரமாக மாறி உள்ளது, ISIS முழுமையாக கொங்கு பகுதிகளில் ஊடருவியிருக்கின்றனர். விபத்தில் பலியான ஜமேஷா முபீன் 21ஆம் தேதி தன்னுடைய வாட்ஸ்அப் ஸ்டேடஸ்சில் IF THE NEWS ABOUT MY DEATH REACHES YOU ,FORGIVE MY MISTAKE , HIDE MY SHORTCOMING ,PARTICIPATE IN MY JANASA AND PRAY FOR ME. (என்னுடைய இறப்பு செய்தி உங்களுக்கு தெரிய வரும் நேரத்தில், நான் செய்த தவறை மன்னித்துவிடுங்கள். என்னுடைய குற்றங்களை மறந்துவிடுங்கள். என்னுடைய இறுதி சடங்கில் பங்கேறுங்கள்) என பதிவு செய்துள்ளார். இது ISIS அமைப்பு தாக்குதலுக்கு முன்பாக பயன்படுத்தக்கூடிய ஒரு வாக்கியம்.

கோவையில் நடைபெற்ற கார் வெடி விபத்து தற்கொலை தாக்குதலுக்கான ஒரு முயற்சிதான். நல்ல வேளையாக அந்த சம்பவம் நடைபெறவில்லை அப்படி நடந்திருந்தால் ஆட்சி கலைக்கப்பட்டிருக்கும். வெடி விபத்து தற்கொலை தாக்குதல்தான் என சொல்வதில் காவல் துறைக்கு தயக்கம் ஏன்? இந்த விவகாரத்தில் தற்போது 5 நபர்களை கைது செய்துள்ள நிலையில் எதற்காக கைது செய்துள்ளோம் எந்த பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என எந்த விவரங்களும் இல்லை.

மேலும் படிக்க | கோவை சிலிண்டர் வெடிப்பு... சிக்கியது சிசிடிவி காட்சிகள்

இந்த விபத்து தொடர்பாக 8 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது அதனை வெளியிட காவல்துறை மறுப்பது ஏன் யாரை காப்பாற்ற தமிழக அரசு முயற்சிக்கிறது. தமிழ்நாடு அரசு முற்றிலுமாக தோல்வி அடைந்துள்ளது என்பதை இந்த சம்பவம் காட்டுகிறது.  கோவை வெடி விபத்து தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியிருக்கிறோம். இந்தச் சம்பவம் எப்படி நடைபெற்றது என்பது குறித்தும் இந்த செய்தி எவ்வாறு திரிக்கபடுகிறது என்பது குறித்தும் தமிழகத்தில் கூடுதலாக NIA அதிகாரிகளை நியமனம் செய்ய வேண்டும் என்றும் அந்தக் கடிதத்தில் கூறியிருக்கிறோம். இன்னும் இரண்டு நாட்களில் தமிழக அரசு முறையாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தமிழக ஆளுநரை சந்திப்போம் என்றார்.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News