நாளை துவங்குகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்!

தமிழக அரசின் அமைச்சரவைக் கூட்டம் 15-ந் தேதி (நாளை) கூட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Updated: Feb 14, 2018, 09:06 AM IST
நாளை துவங்குகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்!
ZeeNewsTamil

தமிழக பட்ஜெட் விரைவில் தாக்கல் செய்ய உள்ள நிலையில் அமைச்சரவைக் கூட்டம் நாளை நடக்கயிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் முழு உருவப்படம் தமிழக சட்டசபையில் நேற்றுமுன்தினம் திறந்து வைக்கப்பட்டது. படத்திறப்பு விழாவில் பேசிய துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) விரைவில் தாக்கல் செய்யப்படும் என்று குறிப்பிட்டார்.

இந்த நிலையில், தமிழக அரசின் அமைச்சரவைக் கூட்டம் 15-ந் தேதி (நாளை) கூட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாளை நடக்க இருக்கும் அமைச்சரவைக் கூட்டத்தில், பட்ஜெட், மானியக் கோரிக்கைகள், புதிய அறிவிப்புகள் ஆகியவை பற்றி விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.

மேலும், 16-ந் தேதி, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு பதவி ஏற்று ஒரு ஆண்டு நிறைவு பெறுகிறது. அதைக் கொண்டாடும் வகையில் நடக்கும் நிகழ்ச்சிகள் குறித்தும் ஆலோசிக்கப்படும் என்று தெரிகிறது. 

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by clicking this link

Close