வரும் 20 வரை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த தடை: ஐகோர்ட்

Updated: Sep 14, 2017, 03:18 PM IST
வரும் 20 வரை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த தடை: ஐகோர்ட்

சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு கூடாது என சபாநாயகருக்கு சென்னை ஐகோர்ட் இன்று உத்தரவிட்டுள்ளது. வரும் புதன்கிழமை வரை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த தடை விதிக்கபட்டுள்ளது.  

இதேபோல் புதன்கிழமைக்கு ஆளுனரிடம் விளக்கம் கேட்டு தெரிவிக்க ஆளுனர் செயலாளர், சபாநாயகருக்கு கோர்ட் உத்தரவிட்டுள்ளார். 

தமிழக சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வலியுறுத்தி தினகரன் தரப்பு மற்றும் திமுக தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. 

இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வரும் நிலையில் தினகரன் தரப்பு எம்.எல்.ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளதா என்று நீதிபதிகள் அரசு தரப்பு வழக்கறிஞரிடம் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த தமிழக அரசு தினகரன் தரப்பு எம்.எல்.ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்க தொடங்கிவிட்டதாக தெரிவித்தது. இதையடுத்து நீதிமன்றத்தில் திமுக தரப்பு வாதம் முன்வைக்கப்பட்டது.

அதில் தினகரன் தரப்பு எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட வாய்ப்பிருப்பதால், அதன் பிறகு நடத்தப்படும் வாக்கெடுப்பு அரசுக்கு சாதகமாக அமையும் எனக் கூறி திமுக எதிர்ப்பு தெரிவித்தது.

இந்நிலையில் தினகரன் தரப்பு மற்றும் ஸ்டாலின் தரப்பு கோரிக்கையை ஏற்று, நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வரும் 20-ம் தேதி வரை தடை விதித்து ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

மேலும் ஆளுநரின் செயலாளர், பேரவை செயலாளரிடம் விளக்கம் பெற்று புதன்கிழமை தெரிவிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

இதையடுத்து டிடிவி ஆதரவு எம்.எல்.ஏ, ஸ்டாலின் தொடர்ந்த வழக்கை, வரும் 20-ம் தேதி ஐகோர்ட் ஒத்திவைத்தது. மேலும் வரும் புதன்கிழமை வரை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த தடை விதிக்கபட்டுள்ளது.  

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by clicking this link

Close