டெல்லியில் 7வது நாளாக தொடரும் தமிழக விவசாயிகள் போராட்டம்

Last Updated: Wednesday, April 5, 2017 - 13:49
டெல்லியில் 7வது நாளாக தொடரும் தமிழக விவசாயிகள் போராட்டம்
Pic courtsey: ANI

7வது நாளாக விவசாய கடன் தள்ளுபடி, காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி ஜந்தர்மந்திரில் தமிழக விவசாயிகள் அரைநிர்வாண போராட்டம் நடத்தி வருகின்றனர். 

அய்யாக்கண்ணு தலைமையில் ஏராளமான விவசாயிகள், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவேண்டும், விவசாய கடன்களை தள்ளுபடி செய்யவேண்டும், விளை பொருட்களுக்கு நியாயமான விலை வழங்கவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ஆதிவாசிளைப்போல இடுப்பில் இலை தழைகளை கட்டிக்கொண்டும், மண்டை ஓடுகளை மாலையாக அணிந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர்.