Group-II தேர்விற்கான அறிவிப்பினை வெளியிட்டது TNPSC!

Group-2 தேர்வுகளுக்கான அறிவிப்புகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய வெளியிட்டுள்ளது!

Zee News Tamil (Web Team) Zee செய்திகள்(இணைய பிரிவு) | Updated: Aug 10, 2018, 02:58 PM IST
Group-II தேர்விற்கான அறிவிப்பினை வெளியிட்டது TNPSC!

Group-2 தேர்வுகளுக்கான அறிவிப்புகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய வெளியிட்டுள்ளது!

சார் பதிவாளர், வருவாய்த்துறை உதவியாளர், தொழிலாளர் உதவி ஆய்வாளர், இளநிலை வேலைவாய்ப்பு அதிகாரி உள்ளிட்ட பதவிகளுக்காக தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 1199 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. 

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் குரூப் 2 தேர்வு மூலம் இந்த பணியிடங்கள் நிரப்பபடவுள்ளது. இந்த தேர்வுகளுக்கான அறிவிப்பினை இன்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. 

இந்த அறிவிப்பின்படி இந்த தேர்விற்கு இன்று முதல் செப்டம்பர் மாதம் 9-ஆம் நாள் வரை விண்ணப்பிக்கலாம். இந்த தேர்விற்கு விண்ணப்பிக்க விரும்பும் தேர்வாளர்கள் ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும். 
தேர்வு கட்டணம் செலுத்துவதற்கு கடைசி நாள் செப்டம்பர் 11 எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த குரூப்-2 தேர்வுகள் வரும் நவம்பர் 11-ஆம் நாள் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வுக்கான பாடத்திட்டம், வயது வரம்பு உள்ளிட்ட பிற தகவல்களை TNPSC-ன் அதிகாரப்பூர்வ இணையதளமான tnpsc.gov.in-ல் அறிந்துகொள்ளலாம்.

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by clicking this link

Close