முந்துங்கள் மக்களே! இந்த இடத்தில் தக்காளி கிலோ ரூ.79க்கு விற்பனை

தமிழகத்தில் தக்காளி இன்று வெளிசந்தையில் ஒரு கிலோ 160 ரூபாய் வரை விற்கப்படுகிறது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 24, 2021, 10:26 AM IST
முந்துங்கள் மக்களே! இந்த இடத்தில் தக்காளி கிலோ ரூ.79க்கு விற்பனை title=

தமிழகத்தில் மழை வெளுத்து வாங்குவதால் தக்காளி விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. அதன்படி தக்காளி இன்று வெளிசந்தையில் ஒரு கிலோ 160 ரூபாய் வரை விற்கப்படுகிறது. கிடுகிடுவென உயர்ந்து வரும் தக்காளி விலையை உடனடியாக அரசு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். 

ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களிலும், வரத்து வரக்கூடிய மாவட்டங்களிலும் மழை (Heavy Rain) பெய்து வருவதால் தக்காளியின் (Tomato) வரத்து குறைந்து விலை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. 

ALSO READ: தக்காளி சட்னிக்கு டாடா, இனி புதினா சட்னி தான்- நெட்டிசன்கள் கலகல

அதன்படி தக்காளி விலையை (Tomato Price hike) கட்டுப்படுத்துவற்கான நடவடிக்கையை அரசு எடுத்து வருவதாக வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் தெரிவித்தார். மேலும், பதுக்கலில் ஈடுபட்டு மேலும் விலை உயர்வதை தடுக்க கண்காணிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவும், ஆய்வுகளை மேற்கொள்வதற்கும் வேளாண் துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளோம். வெகு விரைவில் தக்காளி விலையேற்றம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படும் என்று அவர் கூறியிருந்தார். அதேபோல், பண்ணை பசுமை நுகர்வோர் காய்கறி கடைகளில் தக்காளியை குறைந்த விலையில் விற்பனை செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது. 

இந்த நிலையில் பண்ணை பசுமை நுகர்வோர் காய்கறி கடைகளில் ஒரு கிலோ தக்காளி விலை 85 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை விற்பனை செய்யப்படும் என்று கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்திருந்தார். அதன்படி தற்போது கூட்டுறவுத் துறையால் நடத்தப்படும் சென்னை உட்பட பிற மாவட்டங்களில் உள்ள 65 பசுமை பண்ணை கடைகளில் தக்காளி விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டதுடன், இன்று தக்காளி கிலோ ரூ.79க்கு விற்பனை செய்யப்படுகிறது. இது மக்களுக்கு சற்று ஆறுதலாக இருந்தாலும் இந்த கடைகளை தேடுவது மிகவும் சிரமமாக இருப்பதாக பொதுமக்கள் கூறி வருகின்றனர். 

இதற்கிடையில் பண்ணை பசுமை நுகார்வோார் கடைகளி தக்காளி விற்பனை செய்வதற்காக நாளொன்றுக்கு 15 மெட்ரிக் டன் தக்காளி கொள்முதல் செய்ய கூட்டுறவுத்துறை திட்டமிட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ALSO READ: Tomato: தக்காளி அதிகம் சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள் என்ன?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News