நலிவுற்ற மாணவர்களுக்கு அரசின் சார்பில் பயிற்சி மையம்!

Last Updated : Sep 2, 2017, 05:44 PM IST
நலிவுற்ற மாணவர்களுக்கு அரசின் சார்பில் பயிற்சி மையம்! title=

பொருளாதாரத்தில் நலிவுற்ற மாணாக்கர்களின் வாழ்க்கைத் தரம் மேம்படும் வகையில் பயிற்சி மையம் அமைக்கப்படுமென தமிழக முதல்வர் தெரித்துள்ளார்

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில்:-

"பொருளாதாரத்தில் நலிவுற்ற மாணாக்கர்களின் வாழ்க்கைத் தரம் மேம்படும் வகையில், பல்வேறு முன்னோடித் திட்டங்களை மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்கள் கடந்த 6 ஆண்டுகளாக செயல்படுத்தி வந்தார்கள். மாண்புமிகு அம்மா அவர்களின் வழியில் செயல்படும் இந்த அரசால், கடந்த சட்டப்பேரவை கூட்டத் தொடரில், பொருளாதாரத்தில் நலிவுற்ற மாணாக்கர்கள் பயன் பெறும் வகையில், மத்திய மாநில அரசுத்துறைகள் மற்றும் நாட்டுடமையாக்கப்பட்ட வங்கிகளில் வேலை வாய்ப்பு பெறும் வகையில் அரசின் சார்பில் பயிற்சி மையம் ஒன்று துவக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த பயிற்சி மையம் பொருளாதார ரீதியில் பின் தங்கிய மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியான வட சென்னையில் இந்த ஆண்டு துவக்க மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. எடப்பாடி பழனிசாமி அவர்கள் ஆணையிட்டுள்ளார்கள். இதற்கு அரசுக்கு நடப்பாண்டில் 1 கோடியே 53 இலட்சம் ரூபாயும், அதன் பின்னர் ஆண்டு தோறும் 1 கோடியே 25 இலட்சம் ரூபாயும் செலவு ஏற்படும்.

இப்பயிற்சி மையத்தில், பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணாக்கர்கள்  Staff Selection Commission, Railway Recruitment Board, Tamil Nadu Public Service Commission, Institute of Banking Personnel Selection போன்ற முகமைகளால் நடத்தப்படும் போட்டித் தேர்வுகளை, திறமையாக எதிர்கொண்டு அவற்றில் தேர்ச்சி பெறும் வகையில், முறையான பயிற்சி அளிக்கப்படும். ஒவ்வொரு மூன்று மாதத்திற்கும், 500 மாணாக்கர்கள் என்ற வீதத்தில், ஆண்டு முழுவதும் தொடர்ச்சியாக பயிற்சி அளிக்கப்படும்.

இதன் மூலம் இம்மாணாக்கர்களின் திறன் மேம்பட்டு வாழ்வாதாரம் சிறக்கவழிவகை ஏற்படும்."

என தெரிவித்துள்ளார்.

Trending News