திருச்சி: வேன் - லாரி நேருக்கு நேர் மோதி 10 பேர் பலி!!

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே லாரி மற்றும் வேன் நேருக்கு நேர் மோதிக் கொண்டு விபத்து ஏற்ப்பட்டுள்ளது. இந்த விபத்தில் சுமார் 10 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

Updated: Dec 7, 2017, 08:52 AM IST
திருச்சி: வேன் - லாரி நேருக்கு நேர் மோதி 10 பேர் பலி!!

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே லாரி மற்றும் வேன் நேருக்கு நேர் மோதிக் கொண்டு விபத்து ஏற்ப்பட்டுள்ளது. இந்த விபத்தில் சுமார் 10 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

நாகர்கோவிலில் இருந்து 15-க்கும் மேற்பட்டோர் நேற்று மாலை திருப்பதிக்கு ஒரு வேனில் புறப்பட்டுச் சென்றனர். அந்த வேன் திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த துவரங்குறிச்சி அருகே சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக எதிரில் ஒரு லாரி மீது வந்து மோதியது.

இந்த விபத்தில் 4 ஆண்கள், 3 பெண்கள், 3 குழந்தைகள் என சுமார் 10 பேர் உயிரிழந்தனர். தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு சென்றனர். காயமடைந்தவர்களை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி அவர்களுக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.