தினகரன் ஆதரவு எம்எல்ஏ வீட்டில் ஐடி ரெய்டு

Last Updated : Sep 21, 2017, 01:34 PM IST
தினகரன் ஆதரவு எம்எல்ஏ வீட்டில் ஐடி ரெய்டு title=

கரூரில் உள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் வருமான வரித்துறை சோதனை சோதனை நடத்தி வருகிறது.

தினகரன் ஆதரவாளரும் முன்னாள் அமைச்சருமான செந்தில் பாலாஜியின் நண்பர்கள், உறவினர்கள் வீட்டில் வருமான வரி சோதனை நடைபெறுகிறது. 

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ. செந்தில் பாலாஜி கரூரில் 8 இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 

சோதனை நடைபெறும் இடங்கள் செந்தில் பாலாஜியின் நண்பர்கள் வீடுகள் ஆகும். ராமகிருஷ்ணா நகர், தான்தோன்றிமலை உள்ளிட்ட 8க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெறுகிறது. 

குடகு ரிசார்ட்டில் தங்கியிருந்த செந்தில் பாலாஜி தற்போது தலைமறைவாக உள்ளார். மோசடி வழக்கில் தலைமறைவாக இருக்கிறார் செந்தில் பாலாஜி. இந்நிலையில் கருரில் உள்ள முன்னாள் அமைச்சரும் டிடிவி தினகரன் ஆதரவாளருமான செந்தில் பாலாஜிக்குச் சொந்தமான இடங்களிலும் அவரது உறவினர் வீடுகளிலும் சோதனை நடைபெற்று வருகிறது.

Trending News